Close Menu
    What's Hot

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.16 முதல் பன்னாட்டு புத்தகக் காட்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
    தமிழ்நாடு

    சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.16 முதல் பன்னாட்டு புத்தகக் காட்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தகக்கண்காட்சி நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் பன்​னாட்டு புத்தகக் காட்சி சென்​னை​யில் 2023-ம் ஆண்டு முதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்தவகையில் தொடர்ந்து 4-வது ஆண்​டாக பன்​னாட்டு புத்தகக் காட்சி-2026 சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் ஜன.16 முதல் 18-ம் தேதி வரை நடத்​தப்பட உள்ளது. இதற்​கான இலச்​சினையை அமைச்​சர் அன்​பில் மகேஸ் சென்​னை​யில் நேற்று வெளி​யிட்​டார். இந்​நிகழ்​வில் பள்​ளிக் கல்​வித் துறை செயலர் பி.சந்​தரமோகன், இயக்​குநர் ச.கண்​ணப்​பன், பொது நூல​கத் துறை இயக்​குநர் ச.ஜெயந்​தி, தொடக்கக் கல்வி இயக்​குநர் பூ.ஆ. நரேஷ் உட்பட பலர் கலந்​து​கொண்டனர்.

    தொடர்ந்து அமைச்​சர் மகேஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நடப்​பாண்டு பன்​னாட்​டுப் புத்​தகத் திரு​விழாவுக்​கான இலச்​சினை ‘உல​கைத் தமிழுக்​கும், தமிழை உலகுக்​கும்’ என்ற கொள்​கையை மைய​மாக கொண்டு வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

    இது தமிழகத்​தின் சர்​வ​தேச இலக்​கிய பரி​மாற்​றத்​தில் ஒரு புதிய அத்​தி​யா​யத்தை உரு​வாக்​கும். உலகின் 100 நாடு​களின் பங்​கேற்பு மற்​றும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட மொழிகளில் தமிழ் எழுத்​தாளர்​களின் படைப்​பு​கள் மொழிபெயர்க்​கப்​படு​தல் போன்ற இலக்​கு​களை எட்​டும் முயற்​சி​யாக இந்​தக் கண்​காட்சி அமை​கிறது.

    திறந்த தளமாக மாற்றம்: 2023-ல் பன்​னாட்டு புத்தகக் காட்சி 24 நாடு​களைக் கொண்டு தொடங்​கப்​பட்​டது. இந்த முயற்​சி, 2025-ல் 64 நாடு​களாக விரிவடைந்​தது. தொடர்ந்து நடப்​பாண்டு முதல் பொது மக்​கள் பங்​கேற்​கும் திறந்த தளமாக மாற்​றப்​படு​கிறது.இதன்​மூலம் தமிழக பதிப்​பாளர்​கள் உலக வாசகர்​களை நேரடி​யாகச் சந்​திக்​கும் வரலாற்​றுச் சந்​தர்ப்​பம் உரு​வாகிறது. இதற்​கிடையே 3 ஆண்​டு​களில் 110 தமிழ் எழுத்​தாளர்​களின் 185 நூல்​கள், 26 மொழிகளுக்கு மொழிபெயர்க்​கப்​பட்​டுள்​ளன.

    தமிழ் இலக்​கி​யத்தை சர்​வ​தேச அரங்​கில் நிலைப்​படுத்​து​வதே இந்த கண்​காட்​சி​யின் நோக்​க​மாகும். வரும் ஆண்​டு​களில் அதி​கள​வில் நாடு​கள் பங்​கேற்​கும்​போது தமிழகத்​தின் 2-ம் நிலை நகரங்​களில் கண்​காட்​சியை நடத்​த​வும் ஆலோ​சிப்​போம். நடப்​பாண்​டில் 120-க்​கும் மேற்​பட்ட புத்​தகங்​கள் இந்த கண்​காட்​சி​யில் வெளி​யிடப்பட உள்​ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் 2026 சீசன் ஏலம்: 350 பேர் பட்டியலில் முக்கிய வீரர்கள் யார் யார்?
    Next Article புதிய உச்சம்!. ஒரே நாளில் ரூ.8,000 உயர்ந்த வெள்ளி!. தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?.
    Editor TN Talks

    Related Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    June 19, 2026

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    June 19, 2026

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    தவெகவில் இணைவா..?? ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க..!! பங்கம் செய்த செல்லூர் ராஜு..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.