சென்னையில் இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.8000 உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. இதேபோல், தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.240 உயர்ந்து ரூ.96,24க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணகளால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
அந்தவகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று((டிச.10) சற்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.9) ரூ.96,000க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.12,030க்கு விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.207 ஆகவும் ஒரு கிலோ ரூ.8,000 உயர்ந்து ரூ,2,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேல் ஆபரண தங்கத்தின் விலை ரூ.96000க்கு கீழ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
