Close Menu
    What's Hot

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்: ஐகோர்ட் அனுமதி
    தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்: ஐகோர்ட் அனுமதி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tvvvv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. 1926-ல் உரிமையியல் பிரச்சினை எழும் வரை தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. அதன்படியே இந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

    உயர் நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது.

    எனவே டிச.13-ல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் கோரும் இடத்திற்கு பதிலாக மாற்று இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

    பின்னர் நீதிபதி, மனுதாரர் கோரும் இடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம். 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அதை விட அதிகமான ஆட்கள் பங்கேற்கக்கூடாது. உண்ணாவிரதப் போராட்டத்தில் தனி நபர்களையோ, அரசியல் கட்சியினரையோ தாக்கும் வகையில் பேசக்கூடாது என உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் முதல்வர் வேட்பாளர்!. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சிறப்பு குழு!. தவெக கூட்டத்தில் தீர்மானம்!
    Next Article “விட்டில் பூச்சியை நம்பி…” – தவெகவில் இணைவதாக பரவிய தகவலுக்கு முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் பதில்
    Editor TN Talks

    Related Posts

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.