Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… பக்தர்கள் 9 பேர் பலி
    இந்தியா

    தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… பக்தர்கள் 9 பேர் பலி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ap acid
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திரப் பிரதேசத்தின் பத்ராசலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த பேருந்து சித்தூர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதில், 33 பக்தர்கள், ஒரு ஓட்டுநர், ஒரு கிளீனர் என 35 பேர் பயணித்துள்ளனர். பத்ராசலம் கோயிலுக்குச் சென்று தரிசித்த இவர்கள் பின்னர் அங்கிருந்து அன்னவரம் நோக்கி சென்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை 4 மணி அளவில், பத்ராசலம் – சிந்தூர் இடையே துளசிபகாலு என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் பத்ராசலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அல்லூரி சீதாராமராஜு மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, “அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சிந்தூர் அருகே பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது.

    விபத்து குறித்து அதிகாரிகளிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி வழங்கும்.” என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு வேதனையளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000மும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் பொதுக் கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த புதுச்சேரி காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு!
    Next Article 30 லட்சம் புதிய வேலைகள் என்ற திமுக பொய்யை அம்பலப்படுத்திய ரிசர்வ் வங்கி… அன்புமணி தாக்கு
    Editor TN Talks

    Related Posts

    72-வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப்பட்டியல்!

    July 18, 2026

    சிறந்த தமிழ் திரைப்படம் ராயன் – தேசிய திரைப்பட விருது அறிவிப்பு

    July 18, 2026

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.