Close Menu
    What's Hot

    உலக அளவில் தமிழ் திரையுலகின் பெருமை ; 72-வது தேசிய திரைப்பட விருதாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

    அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் – சிவகார்த்திகேயன் பெருமித வாழ்த்து!

    ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு – சென்னை மாநகராட்சி தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»30 லட்சம் புதிய வேலைகள் என்ற திமுக பொய்யை அம்பலப்படுத்திய ரிசர்வ் வங்கி… அன்புமணி தாக்கு
    அரசியல்

    30 லட்சம் புதிய வேலைகள் என்ற திமுக பொய்யை அம்பலப்படுத்திய ரிசர்வ் வங்கி… அன்புமணி தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025Updated:December 12, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    3 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட  தொழில் வேலைகள்  4.29 லட்சம் மட்டுமே: 30 லட்சம் புதிய வேலைகள் என்ற திமுக பொய்யை ரிசர்வ் வங்கி தரவு அம்பலப்படுத்தி விட்டது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு  தனியார் துறைகளில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக திமுக அரசு தொடர்ந்து தெரிவித்து வந்த தகவல்கள்  பொய்யானவை என்பதை  இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள்  அம்பலப்படுத்தியுள்ளன. தொழில் வளர்ச்சிக்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடாத  திமுக அரசு  தமிழகத்தில் வேலைவாய்ப்புகள்  அதிகரித்து விட்டதாக பொய்யுரைத்து வருவது கண்டிக்கத்தக்கது.

    திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகவும், அதன் மூலம் 34 லட்சத்திற்கும் கூடுதலான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்த பொய்யை அம்பலப்படுத்தும் வகையில், திமுக அரசின்  பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை நான் வெளியிட்டிருந்தேன். அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத திமுக அரசு, தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு  30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தரவுகள் தெரிவிப்பதாக விளக்கமளித்திருந்தது.  அதுவும் பொய் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

    இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார நிலை, தொழில், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் நிலை குறித்த தரவுகளைத் தொகுத்து இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய கையேடு ( Handbook of Statistics on Indian States) என்ற ஆவணத்தை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது, அதில் தான் திமுக அரசின் பொய்கள் தோலுரிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக  ஆட்சிக்கு வந்த  2020-21-ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 39,393 ஆகவும்,  அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 46,453 ஆக இருந்தது. அதன் பின் மூன்றாண்டுகள் கழித்து  2023-24ஆம் ஆண்டில் இறுதியில் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை  40,121 ஆகவும், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 75,675 ஆகவும் உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 3 ஆண்டுகளில் 728 தொழிற்சாலைகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.  இது வெறும் 1.85% வளர்ச்சி தான். அதேபோல், இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையும் 4.29 லட்சம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் மட்டுமின்றி, உள்ளூர் அளவில் சொந்த நிதியிலும், வங்கிக் கடன் மூலமாகவும் உருவாக்கப்பட்ட சிறும், குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் அடங்கும்.

    திமுக ஆட்சியில் தொழில்துறையில் வெறும் 4.29 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவழங்கப்பட்டுள்ள நிலையில், 30 லட்சம் பேருக்கும் கூடுதலாக வேலை கிடைத்திருப்பதாக திமுக அரசு கூறி வருவது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். அதேபோல்  தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை  52,614 ஆக உயர்ந்து விட்டதாக திமுக அரசு கூறி வந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 121 மட்டும் தான் என்பதையும் ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 40,121 தொழிற்சாலைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் மதிப்பு  ரூ.3.74 லட்சம் கோடி மட்டும் தான். அதிமுக ஆட்சியின் இறுதியில் 39,393 தொழிற்சாலைகளின்  மதிப்பு ரூ.3.02 லட்சம் கோடியாக இருந்தது. அடுத்த  மூன்றாண்டுகளில் ரூ.72,770 கோடி மட்டுமே தொழிற்சாலைகளின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக வந்த முதலீடுகள் இல்லாமல் தனியாக செய்யப்பட்ட முதலீடுகளும் அடக்கம். அவ்வாறு இருக்கும் போது ரூ.11.32 லட்சம்  கோடி முதலீடுகள் குவிந்து விட்டதாகவும்,  34 லட்சம் வேலைகள் வழங்கப்பட்டு  விட்டதாகவும் திமுக அரசு கூறிவருவது அப்பட்டமான பொய் என்பதை உணர முடியும்.

    தொழில் முதலீடுகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவை சார்ந்த விஷயங்களில் திமுக அரசு கூறுவதெல்லாம் பொய் தான் என்பதை ரிசர்வ் வங்கி தரவுகள் நிரூபித்துள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகளாக பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வந்த  திமுக அரசுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… பக்தர்கள் 9 பேர் பலி
    Next Article 2028 ஒலிம்பிக்கில் களமிறங்கும் வினேஷ் போகத்!. ஓய்வு முடிவை வாபஸ் பெற்றார்!. உணர்ச்சிப்பூர்வ பதிவு!
    Editor TN Talks

    Related Posts

    மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!

    July 18, 2026

    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரம்.. சிக்கிய 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்..!!

    July 18, 2026

    6 மாதம்தான் தவெக ஆட்சி… திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் – அனிதா ராதாகிருஷ்ணன் கணிப்பு

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலக அளவில் தமிழ் திரையுலகின் பெருமை ; 72-வது தேசிய திரைப்பட விருதாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

    அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் – சிவகார்த்திகேயன் பெருமித வாழ்த்து!

    ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு – சென்னை மாநகராட்சி தகவல்

    ராயனுக்கு தேசிய விருதா? – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

    ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ஆர். லில்லி, டாக்டர் ஆர். சுகுமார் பணியிட மாற்றம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.