Close Menu
    What's Hot

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    சிறந்த தமிழ் திரைப்படம் ராயன் – தேசிய திரைப்பட விருது அறிவிப்பு

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!
    Featured

    மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 nirmal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    *மதுரை மாநகராட்சி சிம்மக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார் – மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் எம்எல்ஏக்கள் முஸ்தபா, கோபிசன் ஆகியோர் பங்கேற்றனர்

    பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

    தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமிப்பது நடைபெற்றுவருகிறது. ஆறு மாதத்திற்கு பிறகு நிரந்தரமாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெறும்.

    மின்வாரிய  ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரத்தைப் பற்றி நாங்கள் உறுதி கூறவில்லை. TNPSC வழியாக தான் மின்வாரிய பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளோம்.  சட்டப்பூர்வ வழிகாட்டுதல்படி தான் தேர்வு செய்வோம்.

    பழனி வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை தேவைப்படுகிறது. பல அளவில் இந்த விசாரணை விரிவடைய வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். நிறைய பேருடைய தொடர்புகள் இதில் இருக்கும் என்பது எங்களுடைய கணிப்பாக உள்ளது.

    இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல, பல இடத்தில் போலி பத்திரங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்திருக்கிறது; இந்த விசாரணை விரிவடைய வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

    ஐந்தாண்டுகளில் பத்திரப்பதிவுத்துறையில் நீர்நிலை , கோவில் இடங்கள் , அரசு இடங்களை போலி பத்திரம், சட்டவிரோத பத்திரப்பதிவு என நிறைய புகார்கள் வந்திருக்கின்றன.

    பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் தரவேண்டும். தேவைப்பட்டால் துறை அமைச்சரிடம் பேசி அதற்கு தனி ஒரு தனி செல் உருவாக்கவுள்ளோம்.

    இது மிகவும் நுணுக்கமாக நடந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப் பதிவுத்துறை தொடர்பான புகார்களில்  எந்த வழக்குகளும் சிபிசிஐடிக்கு  போகவில்லை; புறம்போக்கு நிலம் நீர் நிலைகளை சம்பந்தமில்லாமல் அரசுக்கு தெரியாமல் பத்திரபதிவு செய்திருப்பது முற்றிலும் குற்றச்சம்பவம். அது விசாரிக்கப்பட வேண்டும்.

    பத்திரப்பதிவு துறையில், ஐந்து ஆண்டுகளில் மோசடி பத்திரபதிவு புகார்கள்  இருந்தால் கொண்டு வாருங்கள். புகாராக தெரிவித்தால் கண்டிப்பாக விரிவான கிரிமினல் விசாரணை நடத்தப்படும். எங்குமே அரசு முழு அளவில்  மன்னிக்க முடியாது 100% நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசியல்படுத்துதல் ஆள் பிடித்தல் வேலை என திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு..

    திருமாவளவன் சொல்வது, திமுகவாகத் தான் இருக்கும்.  திமுகதான் எல்லா இடத்திலும் எங்களுடைய எம்எல்ஏக்களை பர்சேஸ் பண்ணும் வேலையில் உள்ளார்கள். 50 கோடி கொடுத்து பர்சேஸ் செய்கிறார்கள் நேற்று வரை அந்த முயற்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    திமுக சார்ந்த நபர்கள் நேற்று வரை 40 கோடி 50 கோடி என விலை பேசும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபட்ட நெட்வொர்க்கிலிருந்து நேற்று வரை 2 கோடிக்கு மேல் பிடிபட்டிருக்கிறது நிறைய இடத்தில் பணம்  பதுக்கிவைத்திருக்கிறார்கள். அனைத்து பணங்களும் ரொக்கமாக பிடிபட்டுள்ளது.

    இன்னும் பல இடங்களில் எம்எல்ஏக்கள் பர்சேஸ் செய்வதற்காக கொடுக்கப்பட்ட பணம், திமுக சார்பாக அது தலைமை சார்பாக செந்தில் பாலாஜி சார்பாக கொடுக்கப்பட்ட பணம் ஆங்காங்கே பதுக்க வைக்கப்பட்டிருக்கிறது.

    அதனை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நிறைய இடங்களில் பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இன்றளவும் அந்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  ஸ்டாலின் அவர்கள் இந்த முயற்சியை கைவிட வேண்டும்

    அனிதா ராதாகிருஷ்ணன், திருச்சி சிவா எப்போது வேண்டுமானாலும் மத்திய அமைச்சர் ஆவார் என எந்த நம்பிக்கையில் சொல்கிறார்? திமுகவிற்கு பின்னால் பிஜேபி இருக்கிறது.

    ஸ்டாலின் சென்னையில் இருக்கும்போது அறிவாலயம் பக்கமே போக மாட்டார். இப்போது லண்டனில் இருந்து மாவட்ட செயலாளர்கள் மீட்டிங் நடத்துகிற அளவிற்கு தான் அந்த கட்சி இருக்கின்றது. இவ்வளவு அவசரமாக மாவட்ட செயலாளர்கள் மீட்டிங் நடத்த அவசியம் பாஜகவுடன் போவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்ற அறிகுறிகள்தான் வருகிறது.

    அங்கிருந்து பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என செய்தித்தாள்களில் வந்துள்ளது. இதைத்தான் அனிதா ராதாகிருஷ்ணன் சொல்கிறார்.

    இதற்கு மேல் சுயநல முடிவை திமுக எடுக்குமேயானால் இதுதான் அவர்களுடைய கடைசி அத்தியாயமாக இருக்கும்.

    எடப்பாடி  என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என யாருக்கும் தெரியவில்லை அதிமுக தலைமை நம்பி யார் பயணிப்பார்கள்; யாராவது அதிமுகவில் சேர்வார்களா அந்த நிலைமையில் இருக்கிறது அதிமுக.

    கட்சி தலைமை கைவிட்ட பின்பு என்ன செய்வார்கள். திமுகவோடு சேர்ந்து முயற்சி செய்த பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் தலை காட்ட முடியாது;  அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையில் முடங்கி கிடக்கின்றனர் ; அரசியல் வாழ்க்கை வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த கட்சியில் தொடர முடியாமல் கட்சியில் தொடர முடியாமல் வெளியில் வருகிறார்கள்.

    மின் கட்டணம் கூடுதலாக வருவது தொடர்பான கேள்விக்கு…

    நிறைய இடங்களில் கணக்கீடுகள் போய் எடுப்பதில் சிறு சிறு தவறுகள் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்து வருகிறோம். கணக்கீடுகள் எடுத்துக் கொண்டு வருகிறோம். ஒரு சில இடங்களில் நன்றியில் தவறுதல் வந்துவிட்டது. சில இடங்களில் தான் அதற்கு அதில் யாருக்கும் தவறாக போய்விடாது மீண்டும் கணக்கீடு எடுக்கும்போது அது சரி செய்யப்படும்.

    ஆறு மாதத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆட்சி கவிழ்ந்துவிடும் என கூறியது தொடர்பான கேள்விக்கு…

    பதற்றத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மாதிரி அனிதா ராதாகிருஷ்ணன் பேசிக் கொண்டிருக்கிறார். தென்மாவட்டத்தில்  பெரிய பிரச்சனைகள், ரவுடியிசம், பல கொலைகள் எல்லாமே அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் தான் நடந்தது.

    அனிதா ராதாகிருஷ்ணன் எந்த துறை அமைச்சராக இருந்தார் என தெரியாமல் செயல்பட்டுக் கொண்டிருந்த அமைச்சர். கண்டிப்பாக இப்போதாவது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    Anitha Radhakrishnan minister nirmal kumar Nirmal Kumar Tamil Nadu Politics TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article72-வது தேசிய திரைப்பட விருதுகள் – இன்று மாலை அறிவிப்பு
    Next Article நீதி மன்றங்களில் வேலை; 800 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி –  கில்லாடியை தேடி வரும் காவல்துறை!
    Editor TN Talks

    Related Posts

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    July 18, 2026

    சிறந்த தமிழ் திரைப்படம் ராயன் – தேசிய திரைப்பட விருது அறிவிப்பு

    July 18, 2026

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    சிறந்த தமிழ் திரைப்படம் ராயன் – தேசிய திரைப்பட விருது அறிவிப்பு

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    நீதி மன்றங்களில் வேலை; 800 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி –  கில்லாடியை தேடி வரும் காவல்துறை!

    மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.