Close Menu
    What's Hot

    72-வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப்பட்டியல்!

    மத நல்லிணக்கத்தின் அடையாளம்… 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் பாரிஸ் மாபெரும் மசூதி!

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீதி மன்றங்களில் வேலை; 800 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி –  கில்லாடியை தேடி வரும் காவல்துறை!
    Featured

    நீதி மன்றங்களில் வேலை; 800 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி –  கில்லாடியை தேடி வரும் காவல்துறை!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 mosadi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீதிமன்றங்களில் வேலை வாங்கித் தருவதாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 800க்கும் மேற்பட்டவர்களிடம்  கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த கில்லாடி ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    நாடு முழுவதும் அரசு பணிகளுக்கான, ஊழியர்கள் முதல் கொண்டு அதிகாரிகள் வரை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் அரசு வேலை ஆசையில் பலர் மோசடி பேர்வழிகளிடம் மாட்டி தங்களது பணத்தை இழந்து வருவது தொடர் சம்பவமாக நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தான், தமிழகத்தின் 32 மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் ஒரு மோசடி கும்பல் தங்களது கைவரிசையை காட்டியுள்ளது.

    நீதிமன்றங்களில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி, 800க்கும் ஏற்பட்டவர்களிடம் கோடிக்கணக்கான பணத்தை இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார் என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டதும் தற்பொழுது அவர் தலைமறைவாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை குறி வைத்தே இந்த கும்பல் தங்களது மோசடியை அரங்கேற்றி வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்திலும், நாகேந்திர குமார் தன்னுடைய ஏஜெண்டாக இரண்டு பேரை அங்கு நியமித்து வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து அவர்களிடம் பேசி, நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும் தங்களது கல்வி தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பை வாங்கித் தர முடியும் என ஆசை வார்த்தை கூறி அதற்கு குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும் எனவும் அதன் பிறகு இரண்டு மாதம் பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர் பணி ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து அவர்களிடம் பணம் பெற்றுள்ளனர்.

    தொடர்ந்து அவர்கள் சொன்னதுபோல் உயர்நீதிமன்றத்தில், யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு பணம் கொடுத்தவர்களுக்கு பயிற்சி வகுப்பு அளித்துள்ளார்கள். நீதிமன்றத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை இவர்கள் குறிப்பு எடுத்தும் வந்துள்ளனர். இதற்காக மாதம் தோறும் 20 ஆயிரம் வரை அவர்களுக்கு ஊதியமாகவும் கொடுத்துள்ளார்கள். மேலும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு (Certificate Verification) என அனைத்தையும் உண்மைப் போல நடத்தி, மாவட்ட நீதிமன்றங்களில் பணியில் சேருமாறு ஆணை வழங்கியுள்ளனர்.

    ஆனால், மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்று விசாரித்த போதுதான் அது முற்றிலும் போலிப் பணி ஆணை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்டோரிடம் கடந்த 2 ஆண்டுகளாக இந்த மோசடி நடந்துள்ளது.

    ஒவ்வொரு நபரிடமும் தலா 7 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.  இந்த மோசடிக்கு டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை நாகேந்திர குமாரிடம் தொலைபேசி மற்றும் நேரிலும் சந்தித்து முறையிட்டபோது விரைவில்  பணத்தை கொடுத்துவிடுவதாக கூறி காலம் தாழ்த்தி வந்ததாகவும் தற்பொழுது தலைமுறைமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும், மோசடிக் கும்பல் லஞ்சம் கொடுத்துப் புகார்களை முடக்கி வைத்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த மோசடியால் ஏராளமான மாணவ-மாணவிகளின் வாழ்க்கை சீரழிந்துள்ளது.  இந்த மோசடிக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் இன்று திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள நாகேந்திரகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்த மோசடி கும்பல் ஏராளமான இளைஞர்களை காசை வார்த்தை கூறி பணத்தை மோசடி செய்து உள்ளார்கள். இன்று திருப்பத்தூர், தர்மபுரி, தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து நாகேந்திரகுமார் வீட்டை முற்றுகையிட்டு உள்ளோம். எங்களைப் போல் இன்னும் ஏராளமானோர் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். தமிழக அரசு இந்த மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எங்களது பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Court Job Scam Financial Fraud Job Scam police investigation Recruitment Fraud Scam Case Tamil Nadu Police
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்!
    Next Article நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!
    Editor TN Talks

    Related Posts

    72-வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப்பட்டியல்!

    July 18, 2026

    மத நல்லிணக்கத்தின் அடையாளம்… 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் பாரிஸ் மாபெரும் மசூதி!

    July 18, 2026

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    72-வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப்பட்டியல்!

    மத நல்லிணக்கத்தின் அடையாளம்… 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் பாரிஸ் மாபெரும் மசூதி!

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    சிறந்த தமிழ் திரைப்படம் ராயன் – தேசிய திரைப்பட விருது அறிவிப்பு

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.