12 ராசிகளுக்கும் இன்றைய ராசி பலன்களை தெரிந்து கொள்வோம்.
மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வியாபாரத்தில் லாபம் இருக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
ரிஷபம்: பணவரவு உண்டு. மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில்அக்கறை காட்டுவர். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
கன்னி: உங்கள் அணுகுமுறையை மாற்றுவது நல்லது. பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாட்களின் ஒத்துழைப்பு ஓரளவு இருக்கும். லாபம் கிடைக்க அதிகமாக உழைப்பீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
விருச்சிகம்: பணவரவு திருப்தி தருவதாக அமையும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனேதிருமணம் கூடிவரும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பணிகளை விரைந்து முடித்து சாதிப்பீர்கள்.
மகரம்: திட்டமிட்ட பணியை முடிக்க போராடுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் ஆகியவற்றை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்குவீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
கும்பம்: தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அக்கம் பக்கத்தினரை அலட்சியப்படுத்தாதீர்கள். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று நடக்கவும்.
மீனம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். சகோதரர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர். அலுவலகத்தில் அமைதியாக இருப்பீர்.
