Close Menu
    What's Hot

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ராசிபலன்»இன்றைய நாள் எப்படி? துல்லிய கணிப்பு
    ராசிபலன்

    இன்றைய நாள் எப்படி? துல்லிய கணிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    astrology
    நவ கிரகங்களில் நிழல் கிரகங்கள் ராகுவும் கேதுவும் 18 மாதங்கள் ஒரு ராசியில் தங்கியிருந்து பலனை தருவார்கள். ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகி உள்ள இந்த நேரத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்? பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பை தற்போது பார்க்கலாம்.

    மேஷம்: நினைத்த காரியம் அடுத்தடுத்து நிறைவேறும். மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கி தெளிவாக முடிவெடுப்பீர்கள். கல்வியாளர், அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். வெளியூர் பயணம் திருப்தி தரும்.

    ரிஷபம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

    மிதுனம்: எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் கரையக்கூடும். கணவன் – மனைவி இடையேயான பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். ஆன்மிகம், யோகாவில் மனதை செலுத்துங்கள். சகோதரரால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும்.

    கடகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பழைய கடனையை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் கிடைக்கும்.

    சிம்மம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரரால் நன்மை உண்டு. உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.

    கன்னி: தொட்ட காரியங்கள் துலங்கும். மனதில் புது தெம்பு பிறக்கும். அனுபவப்பூர்வமாகப் பேசுவீர்கள். பழைய கடனைப் பைசல் செய்ய புது வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

    துலாம்: நீண்டநாட்களாக விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் வீடுதேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல் படுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். திடீர் பயணம் ஏற்படும்.

    விருச்சிகம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாசனை திரவியங்கள், கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளின் நட்பும், உதவியும் கிடைக்கும்.

    தனுசு: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். குலதெய்வப் பிரார்த்தனை களை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

    மகரம்: மனப்போராட்டம், ஒருவித குழப்பம் ஏற்படும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. கணவன் -மனைவிக்குள் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் வரக் கூடும். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

    கும்பம்: வியாபாரரீதியாக சிலரைச் சந்திப்பீர்கள். கடந்தகால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

    மீனம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன் – மனைவி இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதென் மாவட்டத்தில் தொகுதி வேண்டும்… கூட்டணிக்கு ஜான் பாண்டியன் நிபந்தனை
    Next Article ஜோதிட நாள்காட்டி 23.12.2025 | மார்கழி 08
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    16வது வருடாந்திர உச்சி மாநாடு..!! இன்று டெல்லி வருகிறார் ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி..!!

    காலையிலேயே இன்ப அதிர்ச்சி..!! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.