Close Menu
    What's Hot

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    16வது வருடாந்திர உச்சி மாநாடு..!! இன்று டெல்லி வருகிறார் ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ராசிபலன்»சபரிமலையில் ‘விருந்து’ பாணியில் அன்னதானம்
    ராசிபலன்

    சபரிமலையில் ‘விருந்து’ பாணியில் அன்னதானம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ayappa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அன்னதான உணவு, விருந்து போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சாம்பார், ரசம், பாயாசம், அப்பளம், கூட்டு உள்ளிட்ட பல பதார்த்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    சபரிமலை சந்நிதானத்தின் மாளிகாபுரம் கோயிலுக்குப் பின்னால் அன்னதான மண்டபம் உள்ளது. மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து இங்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை உப்புமா, கொண்டைக் கடலை குழம்பு, சட்னி, சுடு தண்ணீர் வழங்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மசாலா கலவை சாதம், பருப்பு குழம்பு, ஊறுகாயும், இரவு உணவாக மாலை 6.45 மணி முதல் கோயில் மூடப்படும் வரை கஞ்சி மற்றும் வாழைக்காய், தட்டாம்பயறு கூட்டும் வழங்கப்படுகிறது.

    தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு உணவருந்தி வருகின்றனர். இந்த உணவு வெளிமாநில பக்தர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. எனவே ‘விருந்து பாணியில்’ அன்னதானம் வழங்கப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்தது. ஆனால் இரண்டு முறை அறிவித்தும் உணவு மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி முதல் அன்னதான உணவில் மாற்றம் செய்யப்பட்டது.

    இதன்படி சாப்பாடு, பருப்பு சாம்பார், ரசம், அவியல், ஊறுகாய், அப்பளம், கூட்டு, பாயாசம் ஆகியவற்றுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மண்டல வழிபாடு தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் சில நாட்களில் நடை சாத்தப்பட உள்ளது. ஆரம்பத்திலே இதுபோன்ற அன்னதானம் வழங்கி இருந்தால் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன்பெற்று இருப்பர். டிச.27-ல் நடை சாத்தப்பட நிலையில் கடைசி நேரத்தில் உணவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஒருநாள் விட்டு ஒருநாள் தான் இந்த உணவு என்பது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 23.12.2025 | மார்கழி 08
    Next Article சமந்தாவை சீண்டிய ரசிகர்கள்… கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    16வது வருடாந்திர உச்சி மாநாடு..!! இன்று டெல்லி வருகிறார் ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி..!!

    காலையிலேயே இன்ப அதிர்ச்சி..!! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு..!!

    வேலைவாய்ப்பை அதிகரிக்கும் 125 நாள் திட்டம்..!! இன்று முதல் தமிழகத்தில் அமல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.