எதைப் பார்த்தும் ஏமாந்து விடாதீர்கள்.. சாதனைகளின் பக்கம் நில்லுங்கள்’ என்று தவெக தலைவர் விஜய் குறித்து நடிகர் சத்யராஜ் விமர்சித்துள்ளார்.
கரூர் துயரத்திற்கு பின்னர் திறந்த வெளி அரங்கில் முதல் முறையாக புதுச்சேரியில் உப்பளம் துறைமுக திடலில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவை நம்பாதீங்க… அவர்களுக்கு உங்களை நம்ப வைத்து ஏமாத்துவது தான் வேலையே என்று தாக்கி பேசியிருந்தார்.
இந்தநிலையில், இந்நிலையில் நடிகரும், பெரியார் கொள்கைகள் மீது பற்று கொண்டவருமான சத்யராஜ் பல மேடைகளிலும் தொடர்ந்து விஜய்க்கு எதிரான கருத்துக்களை மறைமுகமாக கூறி வருகிறார். ஒருபக்கம் அவரின் மகள் திவ்யா சில மாதங்களுக்கு முன்பு தன்னை திமுகவிலும் இணைத்து கொண்டார். பேசும் மேடைகளில் விஜயை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் வெல்லும் தமிழ் பெண்கள்.. மகளிர் உரிமை தோட்டத்தில் இரண்டாவது கட்ட விரிவாக்க நிகழ்வில் பேசிய சத்யராஜ் ‘தந்தை பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் கொண்ட கனவுதான் பெண்களின் இந்த வளர்ச்சி.. நூறு வருட திராவிட இயக்கத்தின் வீச்சுதான் இங்கிருக்கும் பெண்கள்.. எதைப் பார்த்தும் ஏமாந்து விடாதீர்கள்.. சாதனைகளின் பக்கம் நில்லுங்கள்’ என்று பேசி இருக்கிறார்.
