Close Menu
    What's Hot

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: குடியரசு துணை தலைவர், பிரதமர் அஞ்சலி
    இந்தியா

    2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: குடியரசு துணை தலைவர், பிரதமர் அஞ்சலி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parll
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2001-ல் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் உள்பட 10 பேரின் நினைவிடத்தில் குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி செலுத்தினர்.

    பழைய நாடாளுமன்ற கட்டடமான ‘சம்விதான் சாதன்’-்ல் இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடந்தது. குடியரசுத் துணை தலைவரைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மத்திய அமைச்சர்களான கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    பயங்கரவாதிகளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் உயிரிழந்த வீரர்களின் புகைப்படங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

    நாடாளுமன்ற கட்டட தாக்குதலின் 24-வது ஆண்டு நிறைவையொட்டி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர்களும் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்வில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்ளவில்லை. தனக்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பு சபாநாயகர் பதவியை வகித்து வந்த, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) காலமான நிலையில், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஓம் பிர்லா லாத்தூருக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

    பின்னணி: 2001-ம் ஆண்டு இதே தினத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய ஆயுதம் ஏந்திய 5 ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், 6 டெல்லி காவல் துறையினர், நாடாளுமன்ற பாதுகாவலர்கள் இருவர், ஒரு செய்தியாளர் மற்றும் பராமரிப்பாளர் உள்ளிட்ட 10 பேரை சுட்டுக் கொன்றனர்.

    எனினும், டெல்லி காவல் துறை மற்றும் தொழிற்பாதுகாப்புப் படையினர் சேர்ந்து பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தினர். நாடாளுமன்றத்தில் நுழைத்து அவர்கள் தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டு, 5 பயங்கரவாதிகளும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் முகப்பு வாசலில் வைத்தே சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு
    Next Article மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை… மன்னிப்பு கேட்ட மம்தா
    Editor TN Talks

    Related Posts

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    June 13, 2026

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    June 13, 2026

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.