Close Menu
    What's Hot

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!
    Featured

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    editor5By editor5August 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 21 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் முதல் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். நிதி அமைச்சர் மரிய வில்சன் 151 நிமிடங்கள் வாசித்த இந்த பட்ஜெட் உரைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த அரசு அமைந்து கிட்டத்தட்ட 100 நாட்களாகிவிட்டது. இந்த 100 நாட்களின் மதிப்பெண் பூஜ்யம். இந்த பட்ஜெட்டும் மிகப்பெரிய ஜீரோதான்” என்று கூறினார்.

    தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்பதை ஒப்புக்கொண்டாலும், அவற்றை எப்போது செயல்படுத்துவது என்ற அட்டவணையையாவது வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் பட்ஜெட்டில் அப்படியொரு அறிவிப்பு இல்லை என்றார். மாறாக, திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி ‘வெற்றி’ என்ற முன்னொட்டைச் சேர்த்து ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

    அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டம், அயோத்திதாசர் வாழ்விட மேம்பாடு திட்டம், ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ஆகியவை அனைத்தும் திமுகவின் சாதனைகள் என்றும், அவற்றுக்கு ‘வெற்றி’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அன்புச்சோலை திட்டம் முதியோர் பொழுதுபோக்கு மையங்களாகவும், லேப்டாப் திட்டம் வெற்றி மடிக்கணினியாகவும், கலைஞர் கனவு இல்லம் வெற்றி வீடு திட்டமாகவும், மாடல் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகவும், நன்னிலம் திட்டம் மண்ணின் மகள் திட்டமாகவும் மாற்றப்பட்டுள்ளதாக எடுத்துக்காட்டினார்.

    “ஆட்சிக்கு வரும்போது மாற்றம், மாற்றம் என்று சொன்னார்கள். என்ன மாற்றம்? பெயர் மாற்றம் மட்டும்தான்” என்று கேள்வி எழுப்பினார். தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில், இப்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் எனக் குறைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

    கல்வி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டிக்கக்கூட வக்கில்லாத அரசு என்றும், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பயிர்க்கடன் தள்ளுபடி முழுமையாகச் செய்யப்படவில்லை என்றும் அவர் சாடினார். சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்ட உதயநிதி, ஐந்து வாரங்களில் நான்கு லாக் அப் மரணங்கள், ஐந்து சாதிய ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகவும், குழந்தைகள், பெண்கள், முதியோருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

    விலைவாசி உயர்வு, அரிசி விலை உயர்வு குறித்து முதலமைச்சர் பதிலளிக்க மறுப்பதாகவும், அவை முன்னவர் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக் கூறி தப்பித்துக்கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார். மகளிர் உதவித்தொகை குறித்து பட்ஜெட்டில் ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

    tn budget Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!
    Next Article சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!
    editor5

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    August 5, 2026

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    August 5, 2026

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    சட்டமன்ற கூட்டத்தொடர் காலம் நீட்டிப்பு.. செப். 8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!!

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.