Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»2026 தேர்தலில் அதிமுகவில் 75 புதுமுகங்களுக்கு வாய்ப்பு… இபிஎஸ் திட்டம்
    தேர்தல் 2026

    2026 தேர்தலில் அதிமுகவில் 75 புதுமுகங்களுக்கு வாய்ப்பு… இபிஎஸ் திட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் 75 புதுமுகங்களை வேட்பாளர்களாக களமிறக்க, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசுகையில், ‘இன்றைக்கு பொதுக்குழு உறுப்பினர்களாக இருக்கிறவர்கள் தான், நாளைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள்’ என்றார். அவரது பேச்சுக்கு, பொதுக்குழுவில் பலத்த கரகோஷம் காணப்பட்டது.

    வரும் சட்டசபை தேர்தலில், 210 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன், தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    2021 சட்டசபை தேர்தலில், புதுமுகங்கள் 50 பேருக்கு ‘சீட்’ வழங்கப்பட்டது. அதில், பழனிசாமியின் தீவிர விசுவாசிகள் 15 பேர் வெற்றி பெற்றனர். வரும் சட்டசபை தேர்தலில், 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    தேர்தல் முடிவுக்கு பின், தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டால், எம்.எல்.ஏ.,க்கள் விலை போய் விடக்கூடாது என்பதற்காக, தன் விசுவாசிகளுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கவும் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    கடந்த லோக்சபா தேர்தலில், பணம் படைத்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் சிலரை தேர்வு செய்து போட்டியிடும்படி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால், தேர்தல் தோல்விக்கு பயந்து, அவர்கள் தயங்கினர். இதனால், தகுதியான வேட்பாளர்கள் இல்லாத காரணத்தால், சில தொகுதிகளில் அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    எனவே, கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட தயங்கியவர்களுக்கு, சட்டசபை தேர்தலில் வாய்ப்பு தரக்கூடாது என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். அதே சமயம், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களில் 15 பேர் வரை, சட்டசபை தேர்தலில் களமிறக்க வாய்ப்பு உள்ளது.

    தற்போதைய மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களில் ஒரு சிலரை தவிர, மற்ற அனைவருக்கும் ‘சீட்’ உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 46 தனி தொகுதிகளில், கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு அதிகமாக ஒதுக்கி கொடுத்தும், அக்கட்சிகள் தோல்வி அடைந்தன. எனவே, இந்த தேர்தலில், 35 தனி தொகுதிகளில் அ.தி.மு.க.,வே போட்டியிட திட்டமிட்டுள்ளது.

    2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், பகுதி, நகர, ஒன்றிய செயலர்களை வேட்பாளர்களாக ஜெயலலிதா அறிவித்தார்; அவர்கள் வெற்றி பெற்றனர். அதனால், ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் பழனிசாமி ஆலோசித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில்
    Next Article மோடியும், அமித்ஷாவும் பிரச்சாரம் செய்யும் தொகுதிகளில் திமுகவின் வெற்றி நிச்சயம்!. ஆர்.எஸ்.பாரதி நக்கல்!.
    Editor TN Talks

    Related Posts

    முதல் நாளிலேயே 573 மனுக்கள்!. தமிழகத்தில் அனல் பறக்கும் வேட்புமனு தாக்கல்!

    March 31, 2026

    தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா?. 5 வருடம் என்ன செய்தார்கள்?. விஜய் பேச்சு!

    March 30, 2026

    பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல்!. பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்!.

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    April 3, 2026

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    April 3, 2026

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.