Close Menu
    What's Hot

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Uncategorized»வீட்டு கதவை உடைத்து சவுக்கு சங்கர் கைது… மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு
    Uncategorized

    வீட்டு கதவை உடைத்து சவுக்கு சங்கர் கைது… மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025Updated:December 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Savukku Shankar. Supplied
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மிரட்டி பணம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வீட்டுக் கதவை உடைத்து உள்ளே இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் கைது செய்தது.

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வந்தார். இதனால் அவர் மீது வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த வழக்குகள் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தடையுத்தரவு மற்றும் ஜாமின் பெற்று வெளியில் வந்த அவர், மீண்டும் தனது சவுக்கு மீடியா சேனலை நடத்தி வந்தார். இந்நிலையில், மனமகிழ் மன்றம் நடத்தும் ஹரிச்சந்திரன் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக அவர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர்.

    ‘அவரது மனமகிழ் மன்றத்தை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பேசி, தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தி விடுவேன்’ என்று மிரட்டி ரூ.94 ஆயிரம் பறித்ததாக போலீசார் பதிவு செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக, இன்று காலை சென்னை மாநகர போலீஸ் படையினர் அவரது வீட்டை சுற்றி வளைத்தனர். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீசாரால் உடனடியாக கைது செய்ய முடியவில்லை. வீட்டினுள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீசார் வந்துள்ளதாக, வீடியோ வெளியிட்டார்.

    வேறு வழியில்லாத நிலையில், வழக்கறிஞர்கள் வரும் வரை போலீசார் காத்திருந்தனர். வந்த வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. தீர்வு எதுவும் ஏற்படாத நிலையில், தீயணைக்கும் படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து திறந்தனர். சவுக்கு சங்கரிடம் நடத்திய விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமோடியும், அமித்ஷாவும் பிரச்சாரம் செய்யும் தொகுதிகளில் திமுகவின் வெற்றி நிச்சயம்!. ஆர்.எஸ்.பாரதி நக்கல்!.
    Next Article பாசிச போக்கால் திமுக அழிந்துவிடும்… சவுக்கு சங்கர் கைதுக்கு நயினார் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    July 15, 2026

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.