Close Menu
    What's Hot

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!
    Featured

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    Editor web1By Editor web1July 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் ₹2.19 லட்சம் கோடி மதிப்பிலான 7 முக்கிய மெகா திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சரவை முடிவுகள் குறித்த விவரங்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

    இந்தியாவை உலகளாவிய சிப் உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, செமிகான் 2.0 திட்டத்திற்கு ₹1,27,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிப் வடிவமைப்பு, உற்பத்தி உபகரணங்கள், செமிகண்டக்டர் பேக்கேஜிங் மற்றும் ஆராய்ச்சி ஆகிய 6 முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணன் தெரிவித்தார்.

    உள்நாட்டிலேயே மொபைல் போன் உற்பத்தியை அதிகரிக்கவும், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் ₹62,500 கோடி மதிப்பிலான புதிய மொபைல் போன் உற்பத்தித் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    உரம் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடைவதை நோக்கமாகக் கொண்டு, “தேசிய முதலீட்டுக் கொள்கை-2026” ஒப்புதல் பெற பெற்றுள்ளது. இந்த புதிய கொள்கையின் மூலம் அமைக்கப்படும் புதிய உர ஆலைகள் மூலம் உற்பத்திச் செலவு கணிசமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கங்கை நதிக்கரையில் ₹14,448 கோடியில் 6 வழி உயர்மட்டப் பாலமும், வருணா நதிக்கரையில் ₹10,998 கோடியில் 4/6 வழி உயர்மட்டப் பாலமும் அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணன் தெரிவித்தார். ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை இணைக்கும் பரதீப் – ஹரிதாஸ்பூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு ₹2,542 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், குறிப்பாக மின்னணு உற்பத்தி மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!
    Next Article உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??
    Editor web1
    • Website

    Related Posts

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    July 15, 2026

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    July 15, 2026

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.