Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு… திமுக கூட்டணியை வீழ்த்த தயாராகும் பாஜக
    தேர்தல் 2026

    அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு… திமுக கூட்டணியை வீழ்த்த தயாராகும் பாஜக

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk admk bjp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து, அ.தி.மு.க.,வை போல், தமிழக பா.ஜ.,விலும் விரைவில் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.,வினர் ஆர்வமாக உள்ளனர் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப தொகுதிகளை கேட்டு பெற பா.ஜ., தரப்பில் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

    திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தற்போதே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டன. ஆதலால், திமுக கூட்டணி வியூகத்தை முறியடித்து வெற்றி பெற அதிமுகவை போல பாஜகவும் விரும்புகிறது.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., – பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் இடையில் தொகுதி பங்கீடின்போது, கட்சி தலைமை, நிர்வாகிகள் இடையே சிறு சங்கடம் வரக்கூடாது என்பதில், இரு கட்சிகளின் தலைமையும் உள்ளது.

    அ.தி.மு.க.,வில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், நாளை மறுதினம் முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. இதற்கிடையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, அவரது வீட்டில் நேற்று முன்தினம் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ.,வுக்கு ஒதுக்கவுள்ள தொகுதிகள் குறித்தும் பழனிசாமியிடம் பேசியுள்ளார்.

    நாளை டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பியதும், தமிழக பா.ஜ.,விலும் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பி, பா.ஜ., தொண்டர்கள் அதிக அளவில் விருப்ப மனு அளிக்கின்றனரோ, அந்த தொகுதிகளை அ.தி.மு.க.,விடம் இருந்து கேட்டு பெற பா.ஜ., தலைமை முடிவெடுத்துள்ளது.

    இம்மாத இறுதிக்குள் இப்பணிகளை முடித்து, ஜனவரியில் போட்டியிடக்கூடிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யவும் தமிழக பா.ஜ., முடிவெடுத்துள்ளது.

    இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுட்டை விலை கிடுகிடு உயர்வு…. கனவாக மாற போகும் ஏழைகளின் நான் வெஜ்
    Next Article இன்னும் 3 மாதங்களில் நக்சல் தீவிரவாதத்திற்கு முடிவு… அமித்ஷா திட்டவட்டம்
    Editor TN Talks

    Related Posts

    முதல் நாளிலேயே 573 மனுக்கள்!. தமிழகத்தில் அனல் பறக்கும் வேட்புமனு தாக்கல்!

    March 31, 2026

    தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா?. 5 வருடம் என்ன செய்தார்கள்?. விஜய் பேச்சு!

    March 30, 2026

    பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல்!. பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்!.

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    April 3, 2026

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    April 3, 2026

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.