Close Menu
    What's Hot

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    பவிஷ் நாராயணின் புதிய அவதாரம்..! ’லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீடு..!

    வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்..!! 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»சவுக்கு சங்கருக்கு டிச.26ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
    தமிழ்நாடு

    சவுக்கு சங்கருக்கு டிச.26ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sankar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை வருகிற 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அரசாங்கம், காவல்துறை, அரசியல்வாதிகள் ஆகியோர் மீது தனது யூடியூப் சேனலில் கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் சவுக்கு சங்கர். இதன் காரணமாக, அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இதுபோன்ற ஒரு வழக்கில் ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    இதனிடையே, சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டி ரூ. 2 லட்சம் பணம் பறித்ததாக சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், இந்த புகார் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது.

    இந்நிலையில், மடிப்பாக்கம் போலீசார், சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 14-வது மாடியில் உள்ள யூடியுபர் சவுக்கு சங்கர் இல்லத்தை சுற்றி வளைத்தனர். அப்போது, அவர் வீட்டின் கதவை திறக்காததால், தீயணைப்பு படையினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சவுக்கு சங்கரை கைது செய்து, அவரது செல்போன், லேப்டாப் ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போது , திமுக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார். இதற்கிடையில், போலீஸ் தன்னை கைது செய்ய வருவதை அறிந்த சவுக்கு சங்கர், வீட்டில் இருந்தபோது வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு, சவுக்கு சங்கரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, வருகிற 26 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அனிதா ஆனந்த் உத்தரவிட்டார். இதன்பேரில், போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமிஸ் பண்ணிடாதீங்க… எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
    Next Article வகுப்பறையில் மது அருந்திய பள்ளி மாணவிகள்… பாய்ந்தது நடவடிக்கை
    Editor TN Talks

    Related Posts

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    June 16, 2026

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    June 15, 2026

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    பவிஷ் நாராயணின் புதிய அவதாரம்..! ’லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீடு..!

    வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்..!! 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி..!!

    FIFA World cup 2026: சவுதி அரேபியா Vs உருகுவே: 1-1 டிரா! ‘எச்’ பிரிவு பரபரப்பு உச்சம்..!!

    வாகை சந்திரசேகருக்கு ‘யுவ புரஸ்கார்’ தேசிய விருது அறிவிப்பு..!! கௌரவித்த மத்திய அரசு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.