குளிர்காலம் என்பது குளிர் மற்றும் வறட்சியுடன் தொடர்புடையது. மற்ற பாகங்களை போன்றே உதடுகளும் முக்கியமானது. ஆனால் அதை புறக்கணிப்பது மோசமான பாதிப்பை உண்டு செய்யும். உதடுகளில் தோல் உரிதல் மற்றும் தீவிரமான உதடு வெடிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும் குளிர்காலத்தில் உதடை பராமரிக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
குளிர்காலத்தில் உதடுகள் எளிதில் உலர்ந்து போவதால் அடிக்கடி உதடுகளை நக்குவது நம்மையும் அறியாமல் இருக்கும். இது உதட்டில் உமிழ்நீரை தக்கவைப்பதால் சேதத்தை அதிகரிக்கும்.உங்கள் உதடுகளை ஆரோக்கியமாகவும் முழுமையாகவும் வைத்திருக்க எளிதான குறிப்பு இரவில் நல்ல தரமான (பாரபென் மற்றும் ஆல்கஹால் இல்லாத ஒன்று) பயன்படுத்துவது லிப் பாம் பயன்படுத்துங்கள். தூங்கும் போது உதடுகள் ஆழமான ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை பெறுகின்றன.
வெளியில் வரும் போது உதடுக்கு ஒரு பாதுகாப்பு தேவை. எஸ்பிஎஃப் கொண்ட சன்ஸ்க்ரீன் உதட்டுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இவை நிறமி மற்றும் உதடு உலர்வதை தடுக்க பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது. உடலில் போதுமான அளவு நீரேற்றம் இருந்தால் உதடுகளும் அப்படியே இருக்கும் அதனால் குளிர்காலத்தில் தாகம் இல்லை என்று தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது. போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம்.
உதடுகளை வறட்சியில் இருந்து பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய், சியா பட்டர் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். செயற்கை வாசனை மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அதை வாங்க வேண்டாம். நீண்ட நேரம் நீடிக்கும் லிப் பாமை வாங்குங்கள்.
