Close Menu
    What's Hot

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»3வது டி20 போட்டி: இந்திய அணி எளிதில் வெற்றி
    விளையாட்டு

    3வது டி20 போட்டி: இந்திய அணி எளிதில் வெற்றி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    indd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

    தர்மசாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தெ.ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. 2வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய டி ஹாக் இப்போட்டியில் 1 ரன்னில் அவுட்டானார். இதேபோல் மற்ற வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தெ.ஆப்பிரிக்க அணி 117 ரன்களை எடுத்தது.  அதிகபட்சமாக மார்கரம் 61 ரன்கள் விளாசினார்.

    இந்திய அணி தரப்பில், 4 பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். மேலும் 2 பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

    இதன்பின்னர் 118 ரன்களை இலக்காகக் கொண்டு இந்திய அணி பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலேயே அதிரடியாக அபிசேக் சர்மா விளையாடினார். நாலாபுறமும் அவர் விளாச இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து இருந்தபோது அபிசேக் சர்மா ஆட்டமிழந்தார். இதையடுத்து திலக் வர்மாவும், சுப்மன் கில்லும் ஜோடி சேர்ந்தனர். திலக் வர்மா நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாடினார். கடைசி வரை அவுட் ஆகவில்லை. 26 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    முடிவில் 15.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 120 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் டி20 போட்டித் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

    2 அணிகள் இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி, வருகிற 17-ம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வென்றால், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும்.

    முன்னதாக, நடந்து முடிந்த 2 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும், தென்னாப்பிரிக்க அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரியில் உதயமானது லட்சிய ஜனநாயக கட்சி
    Next Article இன்றைய ராசிபலன் @ 15 டிசம்பர் 2025
    Editor TN Talks

    Related Posts

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    April 11, 2026

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.