Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 15 டிசம்பர் 2025
    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் @ 15 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025Updated:December 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rasi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: சந்தர்ப்பங்களையும் சரியாகப் பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி வெளியூரில் இருந்து வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

    ரிஷபம்: நம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வீண், ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பொருட்கள் சேரும். உங்கள் சேமிப்பு மேலும் அதிகரிக்கும்.

    மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். தக்க சமயத்தில் உதவுவார்கள். பணம், நகை, முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள்.

    கடகம்: தைரியமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

    சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்துப்பார்த்து மகிழ்வீர்கள். வழக்குகளில் நல்ல திருப்பம் உண்டாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

    கன்னி: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். முக்கிய பதவிகள், பெரிய பொறுப்புகள் தேடி வரும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

    துலாம்: தேவையற்ற அச்சம், கவலை, குழப்பங்கள் வந்துபோகும். பேச்சில் நிதானம் தேவை. நீண்டதூரப் பயணங்களை தவிர்க்கவும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளிடம் நற்பெயர், பாராட்டு பெறுவீர்கள்.

    விருச்சிகம்: தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

    தனுசு: அடுத்தடுத்து இடையூறுகள், பிரச்சினைகள் வந்தாலும், தைரியத்துடன் சமாளிப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் புதிய தெம்பு, நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

    மகரம்: உங்களிடம் இருக்கும் சோர்வு, களைப்பு நீங்கும். உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பெற்றோர் உடல்நலம் சீராகும்.

    கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உங்களைவிட்டு விலகிச் சென்றவர்கள் தேடிவந்து பேசுவார்கள்.

    மீனம்: வெளி வட்டாரத்தில் யாரிடமும் வீண் பேச்சுகள் வேண்டாம். புதிய நபர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். எதிலும் பொறுமை தேவை.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article3வது டி20 போட்டி: இந்திய அணி எளிதில் வெற்றி
    Next Article ஜோதிட நாள்காட்டி 15.12.2025 | கார்த்திகை 29
    Editor TN Talks

    Related Posts

    சபரிமலையில் ‘விருந்து’ பாணியில் அன்னதானம்

    December 23, 2025

    ஜோதிட நாள்காட்டி 23.12.2025 | மார்கழி 08

    December 23, 2025

    இன்றைய நாள் எப்படி? துல்லிய கணிப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.