சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் . ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 மதிப்புள்ள மாதாந்திர பயணச் சீட்டுகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாநகர பேருந்துகளில் பயணிக்க, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயில் மாதாந்திர பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும், இந்த ரூ. 2000 பாஸ் எடுத்துக் கொண்டால் சென்னையில் AC பேருந்துகளிலும், பொதுத்துறை பேருந்துகளிலும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும், டீலக்ஸ் பேருந்துகளிலும், மினி பஸ்களிலும் மற்றும் இரவு பேருந்துகளிலும் பயணம் செய்ய அனுமதி வழங்குகிறது. இந்த பாஸ் மூலம், பயணிகள் ஒரே மாதத்திற்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும்.
இந்தநிலையில், ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 மதிப்புள்ள மாதாந்திர பயணச் சீட்டுகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஒருங்கினைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மாநகர பேருந்துகளில் நாள்தோறும் பயணம் செய்யும் சுமார் 70,000 மாதாந்திர பயண அட்டைதாரர்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், பயணிகள் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும், ‘சென்னை ஒன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் மாதாந்திர பயண அட்டைகளை வாங்குவோருக்கு ரூ. 100 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ. 100 சலுகையில், ரூ. 50 உடனடியாக விலை குறைப்பாகவும், மீதமுள்ள ரூ. 50 யூ.பி.ஐ மூலம் பரிவர்த்தனை செய்தால் கேஷ்பேக் முறையிலும் திருப்பி அளிக்கப்படும். இந்த சிறப்புச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
