Close Menu
    What's Hot

    HIV பாதிப்பில் 7,000+ மாணவர்கள்.. கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை நிலவரம்..!!

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாணவர் உயிரிழப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
    தமிழ்நாடு

    மாணவர் உயிரிழப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, ஆர்.கே.பேட்டை, கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மோகித் எனும் மாணவர் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் அவர் பள்ளிக்கு சென்றிருந்தபோது, திடீரென பள்ளி வளாகத்தில் உள்ள கைப்பிடி சுவர் இடிந்து மாணவர் மீது விழுந்தது.
    இதில், மோகித் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். மகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொடுக்க மறுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    இந்நிலையில், மாணவர் மோஹித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி உதவியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோஹித் (வயது 12) என்பவர் இன்று (16.12.2025) நண்பகல் 1.00 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
    மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஜனநாயகன்’ இரண்டாவது சிங்கிள் எப்போது? – வெளியான அறிவிப்பு
    Next Article மும்பையில் திருப்பதி ஏழுமலையான் கோயில்… ரூ.14 கோடியில் அமைக்க தேவஸ்தானம் முடிவு
    Editor TN Talks

    Related Posts

    4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    July 30, 2026

    நாள்கூலி தொழிலாளி பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி நோட்டீஸ்! அதிர்ச்சியில் குடும்பம்..!!

    July 30, 2026

    விஜயின் அடுத்த நகர்வு..!! அவசர அவசரமாக முன் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    HIV பாதிப்பில் 7,000+ மாணவர்கள்.. கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை நிலவரம்..!!

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    டிரம்பின் அதிரடி உத்தரவு.. ஈரானில் குண்டுவீச்சு.. உலக நாடுகளில் பரபரப்பு!

    நாள்கூலி தொழிலாளி பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி நோட்டீஸ்! அதிர்ச்சியில் குடும்பம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.