Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு..! எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..!

    பெரம்பூர் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு..!! விரைவில் வருகிறது பிரத்யேக மொபைல் APP..!!

    இன்று விசாரணைக்கு அழைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!! ஆப்சென்ட் ஆன எ.வ.வேலு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருச்சி விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…. மகள்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் விபரீத முடிவு
    தமிழ்நாடு

    திருச்சி விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…. மகள்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் விபரீத முடிவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trichyy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (67). இவரது மனைவி செண்பகவல்லி (65). இருவரும் தங்களது மகள்கள் பவானி (42), ஜீவா (37) ஆகியோருடன் கடந்த 10 ஆம் தேதி ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோயில் கொள்ளிடம் கரையில் அமைந்துள்ள யாத்திரி நிவாஸில் (யாத்திரிகர்கள் தங்கும் விடுதி) வந்து தங்கியுள்ளனர்.

    அவர்கள் கடந்த நான்கு நாட்களாக அறையை விட்டு வெளியே வரவில்லை. அறை உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதை பார்த்ததும் ஊழியர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 4 பேரும் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அழுகிய நிலையில் கிடந்த 4 பேரின் சடலங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சுவாமிநாதனின் இரு மகள்களும் மனநிலை சரியில்லாதவர்கள் என்றும், இதற்காக சுவாமிநாதனின் குடும்பத்தினர் கோயில் கோயிலாக சென்று பரிகாரம் செய்தும், வழிபாடும் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் தான் அவர்களுக்கு குணமாகாததால் மனம் உடைந்து சுவாமிநாதனின் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெள்ளிக்கிழமை பிறந்தவரா நீங்க.. உங்க குணாதிசயம் இதுதான்
    Next Article கணவர் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை… போதை ஆசாமி கைது, மேலும் 3 பேருக்கு வலை
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு..! எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 3, 2026

    பெரம்பூர் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு..!! விரைவில் வருகிறது பிரத்யேக மொபைல் APP..!!

    July 3, 2026

    இன்று விசாரணைக்கு அழைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!! ஆப்சென்ட் ஆன எ.வ.வேலு..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு..! எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..!

    பெரம்பூர் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு..!! விரைவில் வருகிறது பிரத்யேக மொபைல் APP..!!

    இன்று விசாரணைக்கு அழைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!! ஆப்சென்ட் ஆன எ.வ.வேலு..!!

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.