Close Menu
    What's Hot

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    PF கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்..! அதிரடியான மாற்றங்கள்..!

    புதுச்சேரி: அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு ஏற்பட்ட வலிப்பு..! சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநருக்கு பாராட்டு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கணவர் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை… போதை ஆசாமி கைது, மேலும் 3 பேருக்கு வலை
    தமிழ்நாடு

    கணவர் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை… போதை ஆசாமி கைது, மேலும் 3 பேருக்கு வலை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rape
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், கணவர் கண் முன்னே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தில் ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

    ராமேஸ்வரத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்திற்கு புது துணிமணிகள் மற்றும் பொருட்களை வாங்க சென்றுள்ளனர். அங்கு புதுத் துணிமணிகளை வாங்கிக் கொண்டு நேற்று மாலை அவர்கள் இருவரும் ராமேஸ்வரத்திற்கு பேருந்து மூலம் வந்தனர். பின்னர் பேருந்து நிலையத்தில் இறங்கி தங்களது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் அந்த தம்பதியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.

    இதனால் கோபம் அடைந்த கணவர், அந்த நான்கு இளைஞர்களிடம் சென்று ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த அந்த இளைஞர்கள், கணவரை பிடித்து அடித்து உதைத்து மரத்தில் கட்டி வைத்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். ஆனால், அந்த பகுதியில் யாரும் இல்லாததால், அந்த பெண்ணுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. மேலும், அப்போது போதையில் இருந்த அந்த இளைஞர்கள், அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்

    இதனையடுத்து மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கணவர், அந்த பகுதியில் இருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு கணவரின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனை பார்த்த இளைஞர்கள் 4 பேரும் அங்கு இருந்து தப்பியோட முயன்றுள்ளனர். ஆனால், பொதுமக்கள் அவர்களை விரட்டினர். இதில் ஒருவர் பிடிபட்டார். மற்ற மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர், பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினரிடம் தாங்கள் பிடித்து வைத்திருந்த இளைஞரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய மூவரையும் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சி விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…. மகள்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் விபரீத முடிவு
    Next Article வீடு- வீடாக அரசியல் கட்சியினர் சோதனை செய்வோம்… ஜெயக்குமார் பேட்டி
    Editor TN Talks

    Related Posts

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    July 3, 2026

    தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம்..! 5 பேருக்கு நீதிமன்றக் காவல்..!

    July 3, 2026

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    PF கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்..! அதிரடியான மாற்றங்கள்..!

    புதுச்சேரி: அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு ஏற்பட்ட வலிப்பு..! சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநருக்கு பாராட்டு..!

    ஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!

    தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம்..! 5 பேருக்கு நீதிமன்றக் காவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.