Close Menu
    What's Hot

    முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»3வது டெஸ்ட் போட்டி: 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது நியூஸி.
    விளையாட்டு

    3வது டெஸ்ட் போட்டி: 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது நியூஸி.

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    newzealand
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் நியூஸிலாந்து அணி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 575 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. தொடக்க வீர​ரான டேவன் கான்வே இரட்டை சதம் விளாசி அசத்​தி​னார்.

    மவுண்ட் மவுங்​க​னி​யில் உள்ள பே ஓவல் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 334 ரன்​கள் குவித்​தது. டாம் லேதம் 137 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார். டேவன் கான்வே 178 ரன்​களும், ஜேக்​கப் டஃபி 9 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்.

    நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய நியூஸிலாந்து அணி 155 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 575 ரன்​கள் குவித்த நிலை​யில் முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. அபார​மாக விளை​யாடி இரட்டை சதம் அடித்த டேவன் கான்வே 367 பந்​துகளில், 31 பவுண்​டரி​களு​டன் 227 ரன்​கள் குவித்த நிலை​யில் ஜஸ்​டின் கிரீவ்ஸ் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார்.

    ஜேக்​கப் டஃபி 17, கேன் வில்​லி​யம்​சன் 31, டேரில் மிட்​செல் 11, டாம் பிளண்​டல் 4, கிளென் பிலிப்ஸ் 29, ஸாக் ஃபவுல்க்ஸ் 1 ரன்​னில் நடையை கட்​டினர். தனது 5-வது அரை சதத்தை கடந்த ரச்​சின் ரவீந்​திரா 106 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 72 ரன்​களும், அஜாஸ் படேல் 30 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

    மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் தரப்​பில் ஜெய்​டன் சீல்​ஸ், ஆண்​டர்​சன் பிலிப், ஜஸ்​டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இதையடுத்து பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 23 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 110 ரன்​கள் எடுத்​திருந்​தது. தனது 2-வது அரை சதத்தை கடந்த பிரண்​டன் கிங் 78 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​களும், ஜாண் கேம்​பல் 60 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும் சேர்த்​தனர். 465 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி இன்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்​தது.

    கேம்​பல் 45, பிரண்​டன் கிங் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரது விக்கெட்டையும் ஜேக்​கப் டஃபி கைப்பற்றினார். தொடர்ந்து டெவின் 27 மற்றும் அலிக் அதனீஸ் 45 ரன்களில் ஆகியோர் ஆட்டமிழந்தனர். தற்போது ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் ஹோட்ஜ் இணைந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்துள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாமகவில் விருப்ப மனுக்கள்: 27-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
    Next Article காந்தி வேலை திட்டத்தை ஒரே நாளில் அழித்துவிட்டது பிரதமர் மோடி அரசு: ராகுல் காந்தி விமர்சனம்
    Editor TN Talks

    Related Posts

    FIFA World Cup 2026: டி.ஆர். காங்கோவை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய 3 சிங்கங்கள்..!!

    July 2, 2026

    FIFA World Cup 2026: பெல்ஜியம் Vs செனகல்: 3-2 என்ற கணக்கில் பெல்ஜியம் அதிரடி வெற்றி..!!

    July 2, 2026

    ஹர்திக் பாண்டியாவுக்கு எகிறும் மவுசு!. முனைப்பு காட்டும் CSK!. போட்டி போடும் 7 அணிகள்!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு

    கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.