Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 22 டிசம்பர் 2025
    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் @ 22 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaikasi month rasipalan 2025 1747233709496
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: பழைய நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய கடன் வசூலாகும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

    ரிஷபம்: தொழில் வளர்ச்சிக்காக முக்கியப் பிரமுகர்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வைப் புரிந்துகொள்வீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பெரிய பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

    மிதுனம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்துகொள்வார்கள். எக்காரியத்திலும் நிதானம் அவசியம். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

    கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும்.

    சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு. வழக்குகளில் முக்கிய திருப்பம் ஏற்படும்.

    கன்னி: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பல வகையிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பும், அதனால் ஆதாயமும் ஏற்படும். வீட்டில் சலசலப்புகள் ஓய்ந்து அமைதி திரும்பும். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். பேச்சில் பொறுமை தேவை.

    துலாம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.

    விருச்சிகம்: ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு பெறுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து கூடும். உங்கள் இயல்பான, உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பண வரவு, பொருள் வரவு உண்டு.

    தனுசு: தடுமாற்றம், குழப்பம் நீங்கும். எடுத்த காரியத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானம் தேவை.

    மகரம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடல்சோர்வு, வயிற்றுப் பிரச்சினைகள் வந்து சரியாகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வெளிநபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பேச வேண்டாம்.

    கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். வீண், ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

    மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நல்லபடியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் திருப்தி தரும். நண்பர்கள், சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமது விற்று பணம் சம்பாதிக்கிறது திமுக அரசு: சவுமியா அன்புமணி சாடல்
    Next Article ஜோதிட நாள்காட்டி 22.12.2025 | மார்கழி 07
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.