Close Menu
    What's Hot

    முப்படைகளின் வலிமை அதிகரிப்பு.. ரூ.52,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல்..!! பாதுகாப்பு கவுன்சில் கிரீன் சிக்னல்..!!

    கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இரவு, பகலாக 4-வது நாளாக போராடும் செவிலியர்கள்: அமைச்சர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
    தமிழ்நாடு

    இரவு, பகலாக 4-வது நாளாக போராடும் செவிலியர்கள்: அமைச்சர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025Updated:December 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nursessss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பணி நிரந்​தரம், சம வேலைக்கு சம ஊதி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொகுப்​பூ​திய செவிலியர்கள் கடந்த 18-ம் தேதி சென்​னை​யில் உண்​ணா​விரதப் போராட்​டத்தை தொடங்கினர்.

    தமிழ்​நாடு செவிலியர்கள் மேம்​பாட்​டுக் கழகம் சார்​பில் நடந்த உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் 750-க்​கும் மேற்​பட்ட செவிலியர்கள் பங்​கேற்ற நிலை​யில், அரசுக்கு எதி​ராக செவிலியர்கள் கோஷங்​களை எழுப்​பிய​தால், அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

    இதையடுத்​து, செவிலியர்கள் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம், ஊரப்​பாக்​கத்​தில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யனுடன் நடந்த பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​த​தால், நந்​திவரம் கூடு​வாஞ்​சேரி ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் செவிலியர்கள் போராட்​டத்​தில் ஈடு​படத் தொடங்​கினர்.

    நேற்று 4-வது நாளாக பகல், இரவாக செவிலியர்கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். கடும் பனி​யால் செவிலியர்​களில் பலருக்கு உடல்​நலக் குறைவு ஏற்​பட்​டுள்​ளது. ஆனாலும் அவர்​கள் போராட்​டத்தை தொடர்​கின்​றனர். அதே​போல தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள், மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​களில் செவிலியர்கள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

    போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள செவிலியர்​களின் கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும் என்று அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள், அரசு மருத்​து​வர் சங்​கங்​கள், சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில் இன்று மீண்​டும் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள செவிலியர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தவுள்​ளார்.

    பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்ட அறிக்​கை:

    தமிழக சுகா​தா​ரத் துறை​யில் 10 ஆண்​டு​களாக தற்​காலிகப் பணி​யாளர்​களாக பணி​யாற்​றும் 8 ஆயிரத்​துக்​கும் கூடு​தலான செவிலியர்கள், தங்​களுக்கு பணி நிரந்​தரம் வழங்க வேண்​டும் என்று 4 நாட்​களாக போராடி வரு​கின்​றனர். அவர்​களை பணி நிரந்ந்​தரம் செய்ய முடி​யாது என்று தமிழக அரசு அறி​வித்​திருப்​பது, ஆட்​சி​யாளர்​களின் ஆணவத்​தைக் காட்​டு​கிறது.

    இப்​போது ஒப்​பந்த செவிலியர்கள் எவ்​வாறு நியமிக்​கப்​பட்​டார்​களோ, அதே​போல் தான் கடந்த 2004-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்​சிக் காலத்​தில் 45 ஆயிரம் ஆசிரியர்​கள் தொகுப்​பூ​திய அடிப்​படை​யில் நியமனம் செய்​யப்​பட்​டனர். 2006-ம் ஆண்​டில் பாமக ஆதர​வுடன் ஆட்​சிக்கு வந்த கருணாநி​தி, அவர்​கள் அனை​வரை​யும் பணி நிரந்​தரம் செய்​தார்.

    அதே ​போல் இப்​போது செய்ய எந்த தடை​யும் இல்​லை. அரசு அவ்​வாறு செய்​யத் தவறி​னால், வரும் தேர்​தலில் மக்​கள் அதிரடி​யான தீர்ப்பை வழங்​கு​வார்​கள். அதன்​பின் அமை​யும் ஆட்​சி​யில் ஒப்​பந்த செவிலியர்கள் அனை​வரும் பணி நிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள்​.

    இவ்​வாறு அறிக்கையில்​ கூறி​யுள்​ளார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனிதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓடவேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
    Next Article “பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி” – ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    முப்படைகளின் வலிமை அதிகரிப்பு.. ரூ.52,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல்..!! பாதுகாப்பு கவுன்சில் கிரீன் சிக்னல்..!!

    July 4, 2026

    கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!

    July 4, 2026

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முப்படைகளின் வலிமை அதிகரிப்பு.. ரூ.52,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல்..!! பாதுகாப்பு கவுன்சில் கிரீன் சிக்னல்..!!

    கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.