Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»பக்திக்கு வயதில்லை… 18 படியேறி சபரிமலையில் 102 வயது மூதாட்டி தரிசனம்
    ராசிபலன்

    பக்திக்கு வயதில்லை… 18 படியேறி சபரிமலையில் 102 வயது மூதாட்டி தரிசனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    paatti
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவில், 102 வயது மூதாட்டி ஒருவர், மூன்றாவது முறையாக சபரிமலை 18 படிகளில் ஏறிச்சென்று அய்யப்ப சுவாமியை தரிசித்தார்.

    கேரள மாநிலம், வயநாடு, மீனங்காடி பகுதியைச் சேர்ந்த பாருக்குட்டி, 2023-ல் நுாறாவது வயதை கொண்டாடினார். அப்போது அவருடைய பேரன்களில் ஒருவர் சபரிமலைக்கு அழைத்துள்ளார். வாழ்வில் ஒருமுறை கூட சபரிமலை போகாத இவர், பேரனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு மாலையிட்டு விரதமிருந்து முதல் முறையாக சபரிமலை சென்றார்.

    கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக வந்த பாருக்குட்டி, இந்தாண்டு மூன்றாவது முறையாக அய்யப்பனை தரிசிக்க நேற்று சபரிமலை வந்தார். பேரன்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 12 பேர் அவர் வந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

    102 வயதில் ஏற்பட்டுள்ள உடல் தளர்ச்சியால் இவர், பம்பையில் இருந்து டோலியில் வந்தார். பின், அங்கு பணியில் உள்ள போலீசாரின் உதவியுடன் 18 படிகள் ஏறி, அய்யப்பனை தரிசனம் செய்தார். இது ஒரு மகா பாக்கியம் என்று அவர் கூறினார்.

    மூதாட்டி பாருக்குட்டியுடன் செல்பி எடுப்பதில் பக்தர்கள் ஆர்வம் காட்டினர். கேரள மாநிலம் ஏற்றுமானுாரைச் சேர்ந்த தேஜஸ் இயக்கிய, ருத்திரன்றே நீராட்டு என்ற மலையாள திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். போதைப் பொருட்களுக்கு எதிரான முக்கிய தகவலை சொல்பவராக பாருக்குட்டி நடித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!. மாவட்ட நிர்வாகம் அதிரடி!
    Next Article உடல் உறுப்பு தானம்!. நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக மாஸ் காட்டும் தமிழ்நாடு!.
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.