Close Menu
    What's Hot

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»“2026 தேர்தலில் நான் போட்டியிடவில்லை!” – சரத்குமார் தகவல்
    தேர்தல் 2026

    “2026 தேர்தலில் நான் போட்டியிடவில்லை!” – சரத்குமார் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sarath
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “என் பின்னால் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை” என நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்தார்.

    பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ‘கொம்புசீவி’ திரைப்பட குழுவினர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் அருட்தந்தை காட்வின் ரூபஸ் தலைமை வகித்தார். அதிபர் அருட்தந்தை இன்னாசிமுத்து ஆசியுரை வழங்கினார். மாணவர் மன்ற தலைவர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார்.

    செயலர் எல்.லாசர் மற்றும் துணை முதல்வர் லூர்துசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன், நடிகர் சரத்குமார் திரைப்படத்தின் இயக்குநர் பொன்ராம், தயாரிப்பாளர் முகேஷ் டி.செல்லையா உள்ளிட்ட திரைப்பட குழுவினர் பங்கேற்றனர்.

    விழாவில் கலந்துகொண்டு சண்முக பாண்டியன் பேசும்போது, “முதன்முதலில் ஒரு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்கிறேன். ‘கொம்புசீவி’ படத்தின் புரமோஷனுக்காக பல இடங்களுக்கு சென்று வரும் நிலையில் கல்லூரி நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நானும் கலை அறிவியல் கல்லூரியில்தான் பயின்றேன். சென்னையில் லயோலா கல்லூரியில் விஸ்காம் பயின்றேன்.

    கல்லூரி வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக அனுபவியுங்கள். இந்த வாழ்க்கையை முடித்துவிட்டு வேலைக்கு போகும்போது இந்த வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்றால் வருத்தப்படுவோம். நல்ல படிப்பை முடித்து ஒரு டிகிரி பெற வேண்டும். நல்ல நண்பர்கள் கல்லூரியில்தான் அதிகம் கிடைப்பார்கள். அவர்களை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். ‘கொம்புசீவி’ திரைப்படத்தை நண்பர்களோடு சேர்ந்து திரையரங்கிற்கு சென்று பார்த்துவிட்டு உங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

    பேராசிரியர் ரில்பர்ட் ஜெனார்த்தனன் மற்றும் பேராசிரியை அருள் செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பேசினர். தொடர்ந்து குழுப் பாடல், ஊமை நாடக நிகழ்ச்சி, குறும்படக் காட்சி, நாட்டுப்புற நடனம், கிளிப் டிராஃப்ட், பேராசிரியர்களின் தனிப்பாடல், நடனப் போட்டி, தனிநபர் நாடக நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மாணவர் புல தலைவர் ஆரோக்கியதாஸ், மாணவியர் புலத் தலைவி ஷமிலா ஜோஸ்டர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரோஷிலோ ஜோசப் மற்றும் சிவ சந்தோஷ் தொகுத்து வழங்கினர். பேராசிரியர் டேனியல் நன்றி கூறினார்.

    தேர்தலில் போட்டியில்லை: தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார், “என் பின்னால் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.

    மேலும், “விஜய்யை விட பெரிய அரசியல் கட்சியினர் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் குறித்து கேள்வி எழுப்பினால் பதில் அளிக்க தயாராக உள்ளேன்” என விஜய் குறித்த கேள்விகளை தவிர்த்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராமேசுவரம் – அரிச்சல்முனை நான்கு வழி சாலை கோரி மத்திய அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி கடிதம்
    Next Article வங்கதேசத்தில் மற்றொரு மாணவர் தலைவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.