கடந்த வாரம் வங்கதேசத்தின் மைமென்சிங் பகுதியில் திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் இஸ்லாமிய கும்பலால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து, புதுடெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு இன்று பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் அவர்களின் மத இடங்கள் சேதப்படுத்தப்படுவதைக் கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றன. ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புத் தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு சென்றதால் பதற்றம் அதிகரித்தது. வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸின் உருவ பொம்மைகளையும் போராட்டக்காரர்கள் எரித்தனர்.
இந்துக்கள் கொலையை நிறுத்து”, “யுனுஸ் அரசு விழித்துக்கொள்” போன்ற கோஷங்களை எழுப்பிய அவர்கள், வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யுனுஸின் உருவ பொம்மையை எரித்தனர். வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
“நாங்கள் இன்று குரல் எழுப்பவில்லை என்றால் நானும் ஒரு தீபுவாக இருப்பேன், நீங்களும் ஒரு தீபுவாக இருப்பீர்கள்” என்று ஒரு போராட்டக்காரர் கூறினார். மற்றொருவர், “(வங்காளதேசத்தில்) இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். இது (இந்தியா) ராமர் மற்றும் கிருஷ்ணரின் பூமி. நாங்கள் யாரையும் கொல்லவில்லை, ஆனால் எங்கள் சகோதரிகளும் மகள்களும் அங்கு பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள்” என்றார்.
