Close Menu
    What's Hot

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு
    இந்தியா

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025Updated:December 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். 4ஆம் நூற்றாண்டு முதல் கிறிஸ்துமஸ் கிறிஸ்துவர்களின் பண்டிகையாக அங்கீகரிக்கப்பட்டது. முதன்முதலில் ஐரோப்பா கண்டத்தில் தொடங்கி, பின்னர் உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் பரவியது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை குறிப்பதுடன் நம்பிக்கை, அமைதி, மன்னிப்பு, அன்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தேவாலயங்கள் வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    பெங்களூருவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தி கதீட்ரல் ஆஃப் ரிடம்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் உள்ள தி கதீட்ரல் ஆஃப் ரிடம்ஷன் தேவாலயத்தில் இன்று காலை கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றேன். சிறப்பு பிரார்த்தனை அன்பு, அமைதி, மற்றும் கருணை ஆகிய காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்தது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்ல எண்ணத்தையும் தூண்டட்டும்” என கூறியுள்ளார். மேலும் தேவாலயத்தில் பிரார்த்தனை மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரதமர் கோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    முன்னதாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கம் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவரது பதிவில், “அனைவருக்கும் அமைதி, கருணை, மற்றும் நம்பிக்கை நிறைந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்” என கூறியுள்ளார்.

    அதேபோல் ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து பதிவில், “கிறிஸ்துமஸ் பண்டிகையான இந்த சிறப்பான நாளில் அனைவருக்கும் குறிப்பாக கிறிஸ்துவ சமூக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் திருவிழாவான கிறிஸ்துமஸ், அன்பு மற்றும் கருணையை பறைசாற்றுகிறது. மனித குலத்தின் நலனுக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகங்களை நினைவுப்படுத்துகிறது. இந்த புனிதமான பண்டிகை சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சேவை ஆகியவற்றை வலுப்படுத்த நம்மை ஊக்குவிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்? செங்கோட்டையன் சொன்ன பதில்
    Next Article தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது
    Editor TN Talks

    Related Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    February 16, 2026

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    February 16, 2026

    தங்கம் விலை இன்றும் சரசரவென குறைந்தது!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. 

    February 2, 2026

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.