Close Menu
    What's Hot

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்
    தமிழ்நாடு

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை (டிச.26) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிச.27, 28 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    டிச.29-ம் தேதி தென் கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    டிச.30ம் தேதி தென் கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    டிச.31ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    தமிழகத்தில் நாளை (டிசப்.26ம் தேதி) முதல் டிசம்.29ம் தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு, அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சமவெளி பகுதியான திருப்பத்தூரில் 16 டிகிரி செஸ்சியஸ், மலைப் பகுதியான ஊட்டியில் 5.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (டிசம்.26ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்
    Next Article இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்
    Editor TN Talks

    Related Posts

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    April 13, 2026

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    Trending Posts

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.