Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொங்கலுக்குள் 1,000 MRB நர்ஸ்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்!. மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
    தமிழ்நாடு

    பொங்கலுக்குள் 1,000 MRB நர்ஸ்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்!. மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

    Editor web3By Editor web3December 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Minister Ma Subramanian
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வரும் பொங்கலுக்குள் 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தரத்திற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    பணிநிரந்தரம் கோரி கடந்த வாரம் MRB செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதுதொடர்பாக உடனடியாக தலையிட்ட  அமைச்சர் மா.சுப்பிரமணியன், MRB நர்ஸ்களுகள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தார்.

    இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், பணி மாறுதல் மூலம் 31 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி செவிலியர்களுக்கான பணி மூப்பு பட்டியல் வெளியீட்டு விழா
    நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் ஆணைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் பொது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் செந்தில் குமார் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். மேலும் 15,645 செவிலியர்களுக்கான பணி மூப்பு பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

    அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, இன்றயை தினம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரத்திற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் என்பது செய்யப்பட்டு வருகிறது.

    இந்த அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து 4825 செவிலியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகிறார்கள். மீதம் இருக்கிற 8,000 க்கும் மேற்பட்ட எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. வருகின்ற பொங்கலுக்கு முன்பாக ஆயிரம் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்தது.

    அதில் இன்று 169 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு மருத்துவ கட்டமைப்புக்கு உருவாகக்கூடிய பணியிடங்கள் அரசின் சார்பில் சொன்னது போல் பொங்கலுக்கு முன்னாள் மீதமுள்ள 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.

    மேலும், MRB செவிலியர்கள் முறை என்பது 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. 1871 பணியிடங்கள் மட்டுமே அதிமுக ஆட்சி காலத்தில் பணி நிரப்பப்பட்டது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 4825 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது மேலும் ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்படும் எனவும் அதில் முதல் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் ஆணை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    724 செவிலியர்கள் கொரோனா காலத்தில் பணியாற்றினார்கள் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்க்க வேண்டும் என கூறினர். கொரோனா காலத்தில் 2144 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றாலும் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    இன்றயை தினம் 15,645 செவிலியர்களுக்கு பணி மூப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடிடா விசில!. விஜய் கட்சியின் சின்னம் இதுதான்!. வெளியான புது தகவல்!
    Next Article மிடில் கிளாஸ்’ முதல் ‘ரிவால்வர் ரீட்டா’ வரை.. இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்!
    Editor web3
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.