Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»141-ம் ஆண்டு நிறுவன நாள்: காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்
    இந்தியா

    141-ம் ஆண்டு நிறுவன நாள்: காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025Updated:December 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    con
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காங்கிரஸ் கட்சியின் 141ம் ஆண்டு நிறுவன நாள், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் இந்தியா சிக்கி இருந்தபோது, 1885-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. இதையடுத்து சுமார் 50 ஆண்டுக்கும் மேலாக கோடிக்கணக்கான மக்களை திரட்டி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்களின் தலைமையில் அகிம்சா வழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி, நாட்டுக்கு காங்கிரஸ் கட்சி சுதந்திரத்தை பெற்று தந்தது.

    இத்தகைய பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சி, தொடங்கப்பட்டு இன்று 141-ம் ஆண்டு ஆகிறது. இது காங்கிரஸ் கட்சியால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (டிச.28) காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    cong 2

    சென்னையில் கொண்டாட்டம்: இந்திய தேசிய காங்கிரஸின் 141-வது நிறுவன நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சிக் கொடியை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    WhatsApp Image 2025 12 28 at 11.34.04

    செல்வ பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு: இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் 141-ம் ஆண்டு ஸ்தாபன நாளையொட்டி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “இந்திய தேசிய காங்கிரஸின் 141-வது ஸ்தாபன நாள்! நூற்றாண்டு கடந்தும் குறையாத தேசப்பற்று! தமிழ்நாடு காங்கிரஸ் பெருமிதம் கொள்கிறது..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தனியா, அணியா?” – தேர்தல் கூட்டணி குறித்து விஜய் சூசகம் | ‘ஜனநாயகன்’ விழா
    Next Article விஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாப் அணிக்காக களமிறங்கும் ஷுப்மன் கில்
    Editor TN Talks

    Related Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.