Close Menu
    What's Hot

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?
    தமிழ்நாடு

    விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    train
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “தமிழ்நாட்டில் 7 விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, ரயில்களின் நேரம் மற்றும் ஜனவரி 01 தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.”

    ரயில் நேரங்கள் மாற்றம்

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கிய ரயில்களில் ஒன்றாக வந்தே பாரத் ரயில் இருந்து வருகிறது. வந்தே பாரத் ரயிலின் வேகம் மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடம், ரயில் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் பல்வேறு வந்தே பாரத் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

    தெற்கு ரயில்வேயில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் விரைவு, பயணியர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. வரும் 2020 ஆம் ஆண்டிற்கான விரைவு மற்றும் பயணியர் ரயில்களில் புதிய கால அட்டவணை ஜனவரியில் அமல்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதிய ரயில் அட்டவணை ஏன் ?

    ரயில்களின் தாமதத்தை குறைக்கவும் விரைவு ரயில்களில் வேகத்தை அதிகரிக்கவும், பல்வேறு வழித்தடங்களில் புதிய பாதைகளை மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பாதைகளை மேம்படுத்துவதுடன் நவீன சிக்னல் தொழில்நுட்பம் தெற்கு ரயில்வே சார்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு பிரதான ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் வேகமாகவும், பல்வேறு இடங்களுக்கு 30 முதல் 40 நிமிடங்கள் பயணம் நேரத்தை குறைக்கும் வகையில், ரயில் அட்டவணைகள் வெளியிடப்படுவது வழக்கமாக உள்ளது.

    7 ரயில் சேவைகள் மாற்றம்

    தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய கால அட்டவணையின் படி, சென்னை திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ், சென்னை முதல் திருநெல்வேலி, சென்னை முதல் செங்கோட்டை பொதிகை உட்பட 7 விரைவு ரயில்கள் நேரம் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    இதுபோக திருநெல்வேலியில் இருந்து புறப்படும் நெல்லை விரைவு ரயில் 10 நிமிடங்கள், தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முத்து நகர் விரைவு ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்கான புதிய கால அட்டவணை ஜனவரி 1 முதல் அமலாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை – கோவை, சென்னை – மதுரை – கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் தற்போதை விட 30 முதல் 40 நிமிடங்கள் பயணம் நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரயில் அட்டவணைகளில் முழு விவரம்:

    சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது விரைவு ரயில், மாலை 5:55 மணிக்கு புறப்பட்டு காலை 4:00 மணிக்கு சென்றடையும். சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில், இரவு 7:35 புறப்பட்டு காலை 6:40 மணிக்கு சென்றடையும். சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை விரைவு ரயில் 8:50 மணிக்கு புறப்பட்டு காலை 7:00 மணிக்கு சென்றடையும்.

    சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் மதியம் 3:05 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு செல்லும். சென்னை தாம்பரம் முதல் கொல்லம் செல்லும் முறையில் மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு சென்றடையும். சென்னை எழும்பூர் முதல் மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 1:15 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:10 மணிக்கு சென்றடையும்‌ என இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள ரயில்வே அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்
    Next Article புகழ்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்!. இங்கி. முன்னாள் வீரர் ஹக் மோரிஸ் காலமானார்!. ரசிகர்கள் இரங்கல்!
    Editor TN Talks

    Related Posts

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    July 5, 2026

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.