Close Menu
    What's Hot

    தங்கம் விலை அதிரடியாக குறைவு!. இன்றைய நிலவரம் இதோ!

    பெரும் சோகம்!. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்!

    5வது T20| இலங்கையை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய மகளிர் படை?. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 டிசம்பர் 2025
    ராசிபலன்

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaikasi month rasipalan 2025 1747233709496
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: யாரையும் குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

    ரிஷபம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளையெல்லாம் முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும்.

    மிதுனம்: குடும்பத்தார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் வெளி வட்டாரத்தில் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்: அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுதீரும். அலுவலகத்தில் இருந்துவந்த கெடுபிடிகள் நீங்கும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் ஏற்படும்.

    சிம்மம்: நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்களெல்லாம் தேடிவந்து பேசுவார்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.

    கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார். அக்கம்பக்கத்தினரிடம் அளவுடன் பழகுவது நல்லது.

    துலாம்: வீண் அலைச்சல், காரியத்தடைகள் வரக்கூடும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் இழுபறிக்குப் பின்னரே முடியும். வெளிவட்டாரத்தில் நிதானமுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

    விருச்சிகம்: நீண்டகாலமாக நிலுவையில் இருந்த கடனைத் தீர்க்க வழி பிறக்கும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சிலர் பழைய நகையை மாற்றி புது நகை வாங்குவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

    தனுசு: பிரபலங்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நீங்கி அமைதி திரும்பும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும்.

    மகரம்: கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

    கும்பம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தோரிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

    மீனம்: எடுத்த வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நிலவிய தேக்கநிலை மாறும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்
    Next Article 5வது T20| இலங்கையை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய மகளிர் படை?. 
    Editor TN Talks

    Related Posts

    மகரவிளக்கு வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடை திறப்பு

    December 29, 2025

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    December 29, 2025

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 டிசம்பர் 2025

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தங்கம் விலை அதிரடியாக குறைவு!. இன்றைய நிலவரம் இதோ!

    பெரும் சோகம்!. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்!

    5வது T20| இலங்கையை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய மகளிர் படை?. 

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 டிசம்பர் 2025

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    Trending Posts

    தங்கம் விலை அதிரடியாக குறைவு!. இன்றைய நிலவரம் இதோ!

    December 30, 2025

    பெரும் சோகம்!. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்!

    December 30, 2025

    5வது T20| இலங்கையை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய மகளிர் படை?. 

    December 30, 2025

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    December 29, 2025

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.