Close Menu
    What's Hot

    டி20 உலகக்கோப்பை!. மோசமான சாதனையில் இந்தியா முதலிடம்!.

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000!. இன்று அறிவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.
    தமிழ்நாடு

    பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000!. இன்று அறிவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

    Editor web3By Editor web3January 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pongal amount
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான அறிவிப்பை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும், அடுத்தடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பச்சரி மற்றும் கரும்பு உள்ளிட்ட தொகுப்புடன், ரூ.1000 ரொக்கமும் வழங்கினர். ஆனால், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகுப்பில் ரொக்கம் இடம்பெறாதது ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தான் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை நிச்சயம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கமும் இடம்பெறும் என்றும், ரூ.5000 வரை வழங்கப்படலாம் என்றும் எதிர்க்கட்சிகள் யூகிக்க, பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.

    பச்சரிசி, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கான அறிவிப்பு வெளியாகி, டோக்கன் விநியோகமும் தொடங்க உள்ள நிலையில், ரொக்கப் பணத்திற்கான அறிவிப்பு மட்டும் வெளியாகமல் உள்ளது. இந்த சூழலில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்படி, பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, ஒவ்வொரு அட்டைதாரருக்கும் ரூ.3000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,

    பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என கூறப்படுகிறது. தொடர்ந்து, சென்னையில் வரும் 8ம் தேதி அன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெனிசுலா அதிபரை கைவிலங்கு போட்டு அழைத்து சென்ற அமெரிக்க படைகள்!.
    Next Article வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்!. நீதிமன்றம் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    February 23, 2026

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    February 23, 2026

    5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.

    February 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டி20 உலகக்கோப்பை!. மோசமான சாதனையில் இந்தியா முதலிடம்!.

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.

    துணை முதல்வர் ரேஸில் தேமுதிக?. திமுகவில் வெடிக்கும் சர்ச்சை!. இபிஎஸ் சரமாரி விமர்சனம்!.

    Trending Posts

    தமிழகத்தில் இன்று வெளியாகும் வாக்காளா் இறுதிப் பட்டியல்!.

    February 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.