Close Menu
    What's Hot

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»பாசத்தோடு கட்டிப் போட்டவர் ஏவிஎம் சரவணன்: படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    சினிமா

    பாசத்தோடு கட்டிப் போட்டவர் ஏவிஎம் சரவணன்: படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நம்​மையெல்​லாம் பாசத்​தோடு கட்​டிப்​போட்​ட​வர் ஏவி.எம்​.சர​வணன் என்று முதல்​வர் ஸ்டா​லின் புகழாரம் சூட்டியுள்ளார்.

    மறைந்த திரைப்​படத் தயாரிப்​பாளர் ஏவி.எம்​..சர​வணனின் நினை​வேந்​தல் நிகழ்ச்​சி, சென்னை விரு​கம்​பாக்​கத்​தில் உள்ள ஏவி.எம். மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது. சரவணன் படத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

    நிகழ்​வில் முதல்​வர் பேசி​ய​தாவது: வரலாற்​றில் தமிழ் திரையுலகத்தை பற்றி குறிப்​பிட வேண்​டுமென்​றால், அதில் நிச்சய​மாக ஏவி.எம். நிறு​வனத்தை குறிப்​பி​டா​மல் இருக்​கவே முடியாது. அப்​பச்சி என்று மரி​யாதை​யுடன் அழைக்​கப்​படும் ‘மெய்யப்ப செட்​டி​யார்’ மறைவுக்கு பிறகு இந்​நிறு​வனத்தை சரவணன் எப்​படி​யெல்​லாம் கட்​டிக் காத்​திருக்​கிறார் என்று அவருடன் நெருங்​கிப் பழகி​யிருக்​கக்​கூடிய ரஜினி​காந்த், கமல்ஹாசன் ஆகியோர் குறிப்​பிட்டு சொன்​னார்​கள்.

    நான் சென்னை மேய​ராக இருந்​த​போது கடற்​கரை​யில் நடை பயிற்​சிக்கு செல்​வதுண்​டு. அப்​போது சரவணனும், அவருடைய நண்​பர்​களோடு நடைப​யிற்​சிக்கு வரு​வார். நான் அடிக்​கடி அவரை சந்​தித்து பேசுவதுண்​டு. சென்னை எப்​படி இருக்​கிறது, எப்படி அதை டெவலப் செய்ய வேண்​டும் என்​றெல்​லாம் அறிவுரைகளை சொல்​லி​யிருக்​கிறார். இங்கே திறந்து வைக்கப்பட்ட படத்​தில் சரவணன் கை கட்டி இருக்​கின்ற அந்த காட்சி எல்​லோருக்​கும் தெரி​யும்.

    எல்​லோரும் கை கட்​டு​கிறோம். ஆனால், அவர் கை கட்டி நிற்பதுதான் இன்​றைக்​கும் அனை​வரின் நினை​விலும் பரவலாக இருக்​கிறது. ஏதோ பயத்​தின் காரண​மாக அல்ல, அன்​பின் காரண​மாக, பாசத்​தின் காரண​மாகத்​தான் அவர் அவ்​வாறு கை கட்டி நிற்​கிறார். இன்​னும் சொல்ல வேண்​டுமென்​றால், அவர் நம்மையெல்லாம் பாசத்​தோடு கட்​டிப்​போட்டு வைத்​த​தால்​தான் அவ்​வாறு கை கட்டி நின்று நமக்கு பாட​மாகி​யிருக்​கிறார். இவ்வாறு முதல்​வர் பேசி​னார்

    நடிகர் ரஜினி​காந்த் பேசும்​போது, “சினிமா மட்​டுமின்​றி, தனிப்பட்ட முறை​யிலும் எனக்கு உதவிய​வர் ஏவி.எம் சரவணன். ராகவேந்​திரா திருமண மண்​டபத்தை கட்ட ஆலோ​சனை வழங்கிய​வர்.

    திரைப்​படங்​களை எடுக்​கும்​போதே அனைத்து கோணங்​களி​லும் யோசிக்​கக் கூடிய​வர் அவர். ‘சி​வாஜி’ படம் முடிந்த பிறகு ‘நீங்க ஏன் 2 வருஷம் 3 வருஷத்​துக்கு ஒரு முறை படம் பண்​றீங்க? வேண்டாம், வருஷத்​துக்கு ஒரு படம் நடிங்க. வயசு ஆக ஆக பிசியா இருக்​கணும், ஆக்​டிவா இருக்​கணும்’ என்று சொன்​னார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெனிசுலாவில் அமெரிக்க இராணுவத்தின் கொடூரம்!. 32 கியூப அதிகாரிகள் கொல்லப்பட்டனர்!
    Next Article சினிமா நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி காயம்
    Editor TN Talks

    Related Posts

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    February 25, 2026

    நாட்டிற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!. தவெக தலைவர் விஜய்!

    February 25, 2026

    முகத்திலே புன்னகை; அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை நல்லக்கண்ணு!. முதல்வர் ஸ்டாலின்!

    February 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார்!. பியூஷ் கோயல் குற்றச்சாட்டு! 

    நாட்டிற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!. தவெக தலைவர் விஜய்!

    Trending Posts

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    February 25, 2026

    முகத்திலே புன்னகை; அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை நல்லக்கண்ணு!. முதல்வர் ஸ்டாலின்!

    February 25, 2026

    எளிமையின் சிகரம்!. விடைபெற்றார் கம்யூனிஸ்ட் சிங்கம்!. 100 ஆண்டு கால கொள்கை பயணம் நிறைவு!

    February 25, 2026

    மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    February 25, 2026

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.