Close Menu
    What's Hot

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான மனு தள்ளுபடி!. சென்னை ஐகோர்ட்!
    தமிழ்நாடு

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான மனு தள்ளுபடி!. சென்னை ஐகோர்ட்!

    Editor web3By Editor web3January 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kc veeramani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வியடைந்தார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து, தவறான தகவலை தெரிவித்ததாக வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அதன் அடிப்படையில், வீரமணியின் வருமானம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. வீரமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த சொத்துக்களையும், அவரது வருமான வரிக் கணக்குகளையும் ஆய்வு செய்த வருமான வரித்துறை, 14 கோடி ரூபாய் அளவுக்கு வித்தியாசம் உள்ளதாக இடைக்கால அறிக்கை அளித்தது.

    இந்த அறிக்கையின் அடிப்படையில், வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக வீரமணிக்கு எதிராக தேர்தல் அதிகாரி, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில், வருமான வரித்துறை முழுமையான விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, முழு விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, ராமமூர்த்தி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக தேர்தல் ஆணையம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. முழுமையான விசாரணை நடத்துவது குறித்து வருமான வரித்துறை முடிவு செய்யும். இதனால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார் எனக் கேள்வி எழுப்பியது.

    மேலும், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொள்ளை அடித்த ரூ.4 லட்சம் கோடியை இறக்கினாலும் திமுக வெற்றிப் பெற முடியாது!. செல்லூர் ராஜு விமர்சனம்!.
    Next Article கிராம சுகாதார செவிலியர் பணி விவகாரம்!. ஸ்டாலினுக்கு சீமான் கடும் கண்டனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.