Close Menu
    What's Hot

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிராம சுகாதார செவிலியர் பணி விவகாரம்!. ஸ்டாலினுக்கு சீமான் கடும் கண்டனம்!
    தமிழ்நாடு

    கிராம சுகாதார செவிலியர் பணி விவகாரம்!. ஸ்டாலினுக்கு சீமான் கடும் கண்டனம்!

    Editor web3By Editor web3January 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seeman 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அங்கன்வாடி பணிகளோடு கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பணிகளில் கிராமப்புற செவிலியர்களுடன் அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் காரணத்தினால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அங்கன்வாடி ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் கிராம சுகாதாரச் செவிலியருக்கான சிறப்புப் பயிற்சியையும் தமிழ்நாடு அரசு அளித்து வந்தது. அவ்வாறு சிறப்புப் பயிற்சிபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பணி நியமனத்தில் முன்னுரிமையும் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்களைக் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்வதை நிறுத்தி வைத்ததோடு, இனி தமிழ்நாடு மருத்துவப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே கிராம சுகாதாரச் செவிலியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தது. இதனால், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிராம சுகாதார செவிலியராகப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களின் எதிர்காலம் இருண்டுபோனது. அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் அங்கன்வாடி பணியையும், வருமானத்தையும் விடுத்து 2 ஆண்டுகள் சுகாதாரப் பயிற்சிபெறச் சென்றதால் அங்கன்வாடி பணியில் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட எவ்வித சலுகைகளும் கிடைக்கப்பெறாமல் தடைபட்டுப்போனது. இதனால் செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பம் வறுமையில் வாடியது.

    மேலும், கிராம சுகாதார செவிலியர்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய முயன்ற திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தடையாணையும் பெற்றனர். இந்நிலையில் அவ்வழக்கினை காரணம் காட்டியே தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில், அங்கன் வாடி ஊழியர்களின் தொடர்ப் போராட்டத்தை அடுத்து கடந்த ஆண்டு 1200 அங்கன்வாடி ஊழியர்களை மட்டும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்தது. தற்போது தமிழ்நாடு முழுவதும் மீதமுள்ள காலிப்பணியிடங்களில் 1200 செவிலியர் சிறப்பு பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டுமென அங்கன்வாடி பணியாளர்கள் போராடி வரும் நிலையில், வெறும் 200 பணியாளர்களை மட்டும் கிராமப் சுகாதார செவிலியராகப் பணிநியமனம் செய்யப்போவதாக வெளிவரும் செய்திகளால், 2021–23, 2022 – 24 ஆம் ஆண்டுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கிராம செவிலியர் பணி நியமனத்தில் திமுக அரசு பாகுபாடு காட்டுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இது தேர்தல் நேரத்து வாக்குறுதியை நிறைவேற்றாமல், சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு, சிறப்புப் பயிற்சி பெற்ற 1200 அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும், எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணிநியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். சென்னையில் தங்களின் வாழ்வாதார உரிமைக்காக போராடி வரும் அங்கன்வாடி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான மனு தள்ளுபடி!. சென்னை ஐகோர்ட்!
    Next Article கொலம்பியா பிரச்சனையில் திருப்புமுனை!. டிரம்புக்கு போன் போட்ட பெட்ரோ!.  
    Editor web3
    • Website

    Related Posts

    “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

    July 5, 2026

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    July 5, 2026

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.