Close Menu
    What's Hot

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திடீரென இபிஎஸ் வீட்டிற்கு சென்ற நயினார் – அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக?
    அரசியல்

    திடீரென இபிஎஸ் வீட்டிற்கு சென்ற நயினார் – அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக?

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps nayinar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் தொகுதி பங்கீட்டில் அதிமுகவை, பாஜக நிர்பந்திக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், மற்றும் நாதக கூட்டணியில் 4முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாநாட்டு போட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ள பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

    அந்த வகையில் கடந்த 2021 தேர்தல் போல இந்த முறையும் அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக கடந்த முறை 20 இடங்களில் போட்டியிட்டு வெறும் 4 தொகுதிகளில் மட்டும் வெற்றிப்பெற்ற பாஜக, இம்முறை அதிகமான சீட் கேட்பதாக சொல்லப்படுகிறது.

    இதற்கேற்றார்போல் இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற நயினார் நாகேந்திரன் அவரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாஜக சார்பில் இம்முறை சுமார் 56 சீட்டுகள் அதுவும் அதிமுகவுக்கு பலம் வாய்ந்த மேற்கு மண்டலம், தென் சென்னை, கோவையின் முக்கிய தொகுதிகளை குறி வைத்து கேட்பதாக சொல்லப்படுகிறது.

    எனினும், சந்திப்பு முடிந்து வெளியே வந்த நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி இம்மாத இறுதியில் தமிழகம் வருவதால் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தொகுதி பங்கீடு சுமூகமான முறையில் பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    2026 Election ADMK BJP Edappadi Palanisamy EPS அதிமுக இபிஎஸ் பாஜக
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனிக்காட்டு ராஜாவாக நாளை ரிலீசாகும் ‘பராசக்தி’
    Next Article ஜனநாயகன் ரிலீஸ் இல்லை.. விஜய்க்கு பெரிய அடி!
    Editor TN Talks

    Related Posts

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    June 12, 2026

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    June 12, 2026

    நயினாருக்கு ‘கல்தா’?… அமித்ஷா முடிவின் பின்னணி… புதிய தலைவர் யார்?

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.