Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»”ஜனநாயகன்” சர்ச்சை!. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!. திங்கள் கிழமை விசாரணை!.
    இந்தியா

    ”ஜனநாயகன்” சர்ச்சை!. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!. திங்கள் கிழமை விசாரணை!.

    Editor web3By Editor web3January 10, 2026Updated:January 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    supreme court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரி தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது.

    சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வாதிடும்போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக் குழு பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால் திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வு குழுவிற்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

    தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிடும்போது, படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தை பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. உறுப்பினர் பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். 5 பேரில் 4 பேர் அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர்.

    பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களைக்கேட்ட நீதிபதி, படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று நேற்று காலை உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசரம் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கில் பதில்மனு செய்ய அவகாசம் கோரியும், அவகாசம் வழங்காமல், உடனடியாக சான்று வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்காத நிலையில், அந்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து பட நிறுவனம் வழக்கு தொடரவில்லை. அதனால் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தணிக்கை குழு படத்திற்கு சான்று வழங்க பரிந்துரைத்த நிலையில் மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதனால்தான் வழக்கு தொடர்ந்தோம் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?. படத்துக்கு சான்று பெறும் முன்பு வெளியீட்டு தேதி அறிவித்தது ஏன்?. சென்சார் போர்டு சான்று வழங்க பல நடைமுறைகள் இருக்கும் போது, சான்றுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

    அதை விடுத்து நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லாரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், சென்சார் போர்டு மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு பட நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    இந்தநிலையில், இதை எதிர்த்து ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனு மீது திங்கள் கிழமை விசாரணை நடத்தும் உச்சநீதிமன்றம், சென்சார் கொடுக்க உத்தரவு பிறப்பித்தால் பொங்கலுக்கு படத்தை வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே மேடையில் விஜய்-பிரேமலதா-டிடிவி?. கொங்கு மண்டலத்தில் நடக்கப்போகும் ட்விஸ்ட்!.
    Next Article இந்தியா வந்த டிரம்பின் ‘வலது கை’!. ஜன.12 முதல் தூதரகப் பொறுப்பை ஏற்கும் செர்ஜியோ கோர்!.
    Editor web3
    • Website

    Related Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    April 6, 2026

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.