Close Menu
    What's Hot

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக அரசால் பாதிக்கப்படாதவர்களே இல்லை!. அன்புமணி கடும் தாக்கு!.
    தமிழ்நாடு

    திமுக அரசால் பாதிக்கப்படாதவர்களே இல்லை!. அன்புமணி கடும் தாக்கு!.

    Editor web3By Editor web3January 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட திமுக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சி செயலாளர்களில் பெரும்பான்மையினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். தொடக்கத்தில் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்கள், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டில் ரூ.1,300 அடிப்படை ஊதியத்தில் பணி நிலைப்பு செய்யப்பட்டு 2018-ஆம் ஆண்டு முதல் ரூ.15,900 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.

    ஊராட்சி செயலாளர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வரும் ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தர்களுக்கு அவர்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதே ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பதும், ரூ.2000 மட்டுமே ஓய்வூதியம் வழங்குவதும் பெரும் அநீதியாகும். 

    ஊரக உள்ளாட்சிகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் ஊராட்சி செயலாளர்கள் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் 28 மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், அனைத்துப் பணிகளையும் ஊராட்சி செயலாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். கடந்த 6 நாள்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அது குறித்த எந்தக் கவலையும், அக்கறையும் இல்லாமல் இந்த சிக்கலுக்கு தீர்வு காணாமல் அலட்சியம் காட்டி வருகிறது.

    தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கணக்கெடுக்கவே முடியாத அளவுக்கு ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை வைத்துப் பார்க்கும் போது திமுக ஆட்சியால் பாதிக்கப்படாதவர்களே இல்லையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், இதுகுறித்த கவலையே இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு விழித்துக் கொண்டு ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாதி, மதத்தை தாண்டி நம்மை இணைப்பது தமிழ் தான்!. உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
    Next Article புது கெட்டப்பில் டெல்லி சென்ற விஜய்!. சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார்!
    Editor web3
    • Website

    Related Posts

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    April 12, 2026

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    April 12, 2026

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    Trending Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    April 12, 2026

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    April 12, 2026

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.