Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை!. பயணிகளை சுரண்ட திமுக அரசு துணை போவதா?. அன்புமணி கேள்வி!
    தமிழ்நாடு

    ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை!. பயணிகளை சுரண்ட திமுக அரசு துணை போவதா?. அன்புமணி கேள்வி!

    Editor web3By Editor web3January 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் பயணிகளை சுரண்ட திமுக அரசு துணை போவதா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    சென்னையிலிருந்து நாளை 13-ஆம் தேதியும், நாளை மறுநாள் 14-ஆம் தேதியும் மதுரை செல்வதற்குன் ரூ.4,000 வரையிலும், நெல்லை செல்ல ரூ.4,500 வரையிலும், கோவைக்கு ரூ.3,800 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்து வருகிறது.

    ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு முறையும் அம்பலப்படுத்தி வருகிறது. அப்போதெல்லாம் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி ரூ.100 அல்லது ரூ.200 கட்டணக் குறைப்பு செய்ய வைப்பது, அதையும் மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது போன்ற ஏமாற்று வேலைகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது.

    ஒரு மக்கள்நல அரசின் கடமை மக்களின் பக்கம் நிற்பது தான். திமுக அரசு மக்களின் பக்கம் நிற்கிறது என்றால், சட்டவிரோதமாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் கட்டணங்களைக் குறைக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட திமுக அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பக்கம் நின்று அவை மக்களை சுரண்டுவதற்கு துணை போவதையே திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது.

    தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து, தனியார் முதலாளிகளுக்கு ஏவல் செய்வதையே கடமையாக வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை திமுக அரசு தடுக்கத் தவறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை அந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருந்தால் பொதுமக்கள் எளிதாக சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வசதியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING| நாடே அதிர்ச்சி!. PSLV C-62 ராக்கெட் லாஞ்ச் தோல்வி!. 
    Next Article கூட்டணி நிலைபாட்டில் ஒரே முடிவு?. வழிக்கு வந்த ராமதாஸ் புதிய அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.