Close Menu
    What's Hot

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மகளிருக்கு மாதம் ரூ.2000!. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்!. தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட EPS!
    தமிழ்நாடு

    மகளிருக்கு மாதம் ரூ.2000!. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்!. தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட EPS!

    Editor web3By Editor web3January 17, 2026Updated:January 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    2026-க்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதற்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியில், மகளிர் குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அனைவருக்கும் இலவச வீடு, மகளிர் போல ஆண்களுக்கும் நகர பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அம்மா இருச்சக்கர வாகனத் திட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு தலா ரூ. 25,000 வழங்கப்படும், கிராமப்புறங்களில் வீடு இல்லாதோருக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்) : சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    அனைவருக்கும் வீடு (அம்மா இல்லம் திட்டம்) : ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

    100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்: 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

    அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்: மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராமதாஸ் இன்; திருமா அவுட்?. திமுக கூட்டணியில் சலசலப்பு!. 
    Next Article ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.