Close Menu
    What's Hot

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை!. அன்புமணி விமர்சனம்!
    தமிழ்நாடு

    மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை!. அன்புமணி விமர்சனம்!

    Editor web3By Editor web3January 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அன்புமணி, பொருளாதாரத்தை விட அதிக வளர்ச்சி மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை செய்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக துரும்பைக் கூட அசைக்காத திமுக அரசு, ஆண்டுக்கு ஆண்டு மக்களை மேலும், மேலும் குடிகாரர்களாக்கி மது வணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது. இது சாதனை அல்ல…. வேதனை.

    போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகிருந்த நிலையில், நடப்பாண்டில் அதை விட 14.10% அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19% அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை விட அதிகமாக மது வணிகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் திமுக அரசு சாதனை படைக்கிறது.

    கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின் போது போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில், நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.6 ஆயிரம் கோடியையும் இந்த மாதத்திலேயே திரும்பவும் வசூலித்து விட இலக்கு நிர்ணயித்து திமுக அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தான் எழுகிறது.

    பொங்கல் திருநாள் மது வணிகத்தில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது என்பது தான். இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும் போது 19% ஆகும். திமுக ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9% மதுக்கடைகளை மூடிய திமுக அரசு, 19% கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத் திறந்து மதுவை விற்பனை செய்திருப்பது உறுதியாகியிருக்கிறது.

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்த நிலையிலும் மதுவிலக்கை நோக்கி பயணிக்கவில்லை, மதுப் பெருக்கத்தை நோக்கித் தான் பயணிக்கிறது என்பதற்கு இதைத் தவிர வேறு சான்றுகள் தேவையில்லை. மக்கள்விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
    Next Article நிர்வாகத் திறமையற்ற திமுக அரசால் கடன்சுமை அதிகரிக்கிறது!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    June 13, 2026

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    June 13, 2026

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    நடிகையின் காலில் விழுந்த மிஷ்கின்; காரணம் என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.