Close Menu
    What's Hot

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    ஐபிஎல் போட்டிகளை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்?

    புதுச்சேரியில் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நிர்வாகத் திறமையற்ற திமுக அரசால் கடன்சுமை அதிகரிக்கிறது!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
    தமிழ்நாடு

    நிர்வாகத் திறமையற்ற திமுக அரசால் கடன்சுமை அதிகரிக்கிறது!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    Editor web3By Editor web3January 17, 2026Updated:January 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தொடர்ந்து, “தி.மு.க. அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் அறிவித்திருக்கிறீர்கள். ஏற்கெனவே கடன்சுமை அதிகமாக உள்ளது. நீங்கள் சொல்வதை எப்படிச் சமாளிக்க முடியும்?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அவர்களுக்கு (தி.மு.க.) திறமை இல்லை; எங்களுக்குத் திறமை இருந்தது. நாங்கள் ஆட்சி செய்யும்போது 5 லட்சத்து 18 ஆயிரம் கோடிதான் கடன் இருந்தது. எந்தச் சூழ்நிலையில்? ஓராண்டுக் கொரோனா காலத்தில் கூட அரசுக்கு வரி, வருவாய் இல்லாத நேரத்தில் கூட, கொரோனா தடுப்புக்கு ரூ.40 கோடி செலவு செய்தோம். நாங்கள் திறமையாக நிதியைக் கையாண்டு, நிதிச்சுமை இல்லாமல், நிதிச்சுமை குறைவாக உள்ள சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம்.

    ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, நிதி மேலாண்மைக்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் கடன் குறைக்கப்படும், வருவாய் உயர்த்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக நிபுணர் குழு அமைக்கப்பட்ட பிறகு கடன் தான் அதிகரித்திருக்கிறது. சுமார் இந்த தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில் 5.5 லட்சம் கோடி கடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாவற்றையும் சமாளிக்கலாம். நிர்வாகத் திறமையற்ற அரசு இருக்கும்போதுதான் கடன்சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

    இரண்டாம் கட்டத் தேர்தல் அறிக்கை வெளியிடும்போது இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்படும். எங்களுடைய தேர்தல் தயாரிப்புக் குழு ஒவ்வொரு மண்டலமாகச் சென்று மக்களிடம் கோரிக்கைகளைப் பெற்று, அதை அறிக்கையாகத் தயாரித்து ஆய்வுசெய்து, மக்கள் என்னென்ன நினைக்கிறார்களோ அதன் அடிப்படையில் எங்கள் தேர்தல் அறிக்கை உருவாகும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை!. அன்புமணி விமர்சனம்!
    Next Article ஆட்சியில் பங்கு!. கொளுத்தி போட்ட மாணிக்கம் தாக்கூர்!. தமிழக அரசியலில் பரபரப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    ஐபிஎல் போட்டிகளை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்?

    April 2, 2026

    புதுச்சேரியில் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய்..!

    April 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    ஐபிஎல் போட்டிகளை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்?

    புதுச்சேரியில் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய்..!

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    சென்னை வரும் பிரதமர் மோடி..! 3,000 போலீசார் பாதுகாப்பு..!

    Trending Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    ஐபிஎல் போட்டிகளை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்?

    April 2, 2026

    புதுச்சேரியில் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய்..!

    April 2, 2026

    சென்னை வரும் பிரதமர் மோடி..! 3,000 போலீசார் பாதுகாப்பு..!

    April 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.