Close Menu
    What's Hot

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்; திமுக ஆட்சியை அகற்ற இந்த ஒரே காரணம் போதும்!. அன்புமணி தாக்கு!
    தமிழ்நாடு

    கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்; திமுக ஆட்சியை அகற்ற இந்த ஒரே காரணம் போதும்!. அன்புமணி தாக்கு!

    Editor web3By Editor web3January 18, 2026Updated:January 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு என்ற ஒரு காரணமே போதும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் என்ற இடத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கஞ்சா போதைக் கும்பல் கற்களை போட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்ததால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் இன்னும் விலகாத நிலையில், கிட்டத்தட்ட அதே நேரத்தில் அதே மாவட்டத்தில் மேலும் இரு இடங்களில் கஞ்சா போதைக் கும்பல் அடுத்தடுத்து வெறியாட்டங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. கஞ்சா போதையில் நடைபெறும் வன்முறைகளும், குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கஞ்சா சீரழிவைக் கட்டுப்படுத்துவதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    திருத்தணியை அடுத்த தாழவேடு இருளர் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கஞ்சா போதையில், இரு சக்கர ஊர்திகளில் நுழைந்த 6 இளைஞர்கள் அங்குள்ள வீடுகள், மின் விளக்குகள், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை உடைத்து சூறையாடியது. அங்கு வாழும் மக்களையும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் வசை பாடினார்கள். இந்த அட்டூழியத்தைத் தட்டிக் கேட்ட இராமசாமி என்பவரை கஞ்சா போதைக் கும்பல் இரும்புக் கம்பியால் கொடூரமான முறையில் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை இராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அதேபோல், திருத்தணி – திருப்பதி நெடுஞ்சாலையில் மத்தூர் தொடர்வண்டி கடவுப் பாதை அருகில் கஞ்சா போதையில் தகராறு செய்து கொண்டிருந்த இரு இளைஞர்கள், அவ்வழியே சென்ற மகிழுந்து மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியதில் அதில் பயணம் செய்த ஹரிதாஸ், சாய் லட்சுமி என்ற இருவர் படுகாயம் அடைந்தனர்.

    கஞ்சா போதையில் இவ்வளவு குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அது குறித்து வாயைக் கூட திறக்க மறுக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இளைஞர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு கூட அவருக்கு மனம் வரவில்லை. மாறாக, அரசு எந்திரத்தின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி இத்தகைய குற்றங்கள் குறித்த செய்திகளையும், அது குறித்த அரசியல் தலைவர்களின் விமர்சனங்களையும் வெளியில் வராமல் தடுப்பதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த தீவிரத்தையும், வேகத்தையும் கஞ்சாவைக் கட்டுப்படுத்துவதில் காட்டினாலாவது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரு தாக்குதல்கள், பொதட்டூர்பேட்டைக்கு அருகில் அரசு பேருந்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்களால் சூறையாடப்பட்டது, ஒண்டிக்குப்பத்தில் இரு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது என திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் கஞ்சா போதையின் தாக்கத்தில் நடந்த குற்றங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

    திமுக ஆட்சியில் கல்வித்துறை சீரழிவு, மருத்துவத்துறை சீரழிவு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாமை, 87% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதியை பலி கொடுத்தது, வரலாறு காணாத வகையில் மின்சாரக் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை உயர்த்தியது என திமுக ஆட்சியை அகற்றுவதற்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவை அனைத்தையும் விட தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களை கஞ்சாபோதைக்கு அடிமையாக்கி, அவர்களை சமூகத்திற்கு எதிரானவர்களாகவும், வன்முறைவாதிகளாகவும் மாற்றிய ஒற்றைக் காரணமே திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு போதுமானது. இன்னும் சில வாரங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக அரசை அகற்றும் ஜனநாயக, சமூகக் கடமையை தமிழ்நாட்டு மக்கள் செய்து முடிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜன.20ல் தவெக தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்!.
    Next Article தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    June 11, 2026

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    June 11, 2026

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறிய கஜகஸ்தான் வீரர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.