Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாமக பெயர், சின்னம், கொடி யாருக்கு?. சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு!
    தமிழ்நாடு

    பாமக பெயர், சின்னம், கொடி யாருக்கு?. சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு!

    Editor web3By Editor web3January 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    537952 pmk leaders
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமகவில் தந்தை மகன் மோதல் நீடித்து வரும் நிலையில், அக்கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் ஆதரவாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பாமக உட்கட்சி பூசல், அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையேயான மோதலால் தீவிரமடைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் நிலைமை மற்றும் கூட்டணி விவாதங்கள் கேள்விக்குறியாக உள்ளன. ஒவ்வொரு தேர்தல் களத்திலும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பாமக தொடர்பான பேச்சு அதிக அளவில் அடிபடும். நீண்ட காலம் பேச்சுவார்த்தை நடத்தி தனக்கான இடங்களை, தான் இடம்பெறப்போகும் கூட்டணியிடம் பேசிப் பேசியே அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உறுதி செய்துவிடுவார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் உட்கட்சி பூசல் காரணமாக அன்புமணி தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ராமதாஸ் தரப்பினர் திமுகவுடன் இணக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இப்படியிருக்கையில், கடந்த டிசம்பர் இறுதியில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அன்புமணியின் பதவிக் காலம் மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தநிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகக் கூறி, பாமகவின் பெயர் சின்னம் கொடியை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் ஆதரவாளரான டாக்டர் அருள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமைகள் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ராமதாஸ் ஆதரவாளர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉழவர்களின் முதல் எதிரியே திமுக தான்!. அன்புமணி விளாசல்!
    Next Article ஸ்பெயினில் பயங்கரம்!. 2 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 39 பேர் பலி!. பலர் கவலைக்கிடம்!
    Editor web3
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.